வைக்கோல் படப்புக்குள் பதுங்கியிருந்த 3 நல்ல பாம்புகள் – லாவகமாக பிடித்த பாம்பு மீட்பர்

வைக்கோல் படப்புக்குள் பதுங்கியிருந்த 3 நல்ல பாம்புகள் பத்திரமாக மீட்கப்பட்டு வனப்பகுதியில் விடப்பட்டன.  

தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் வைக்கோல் படப்புக்குள் நல்ல பாம்பு ஒன்று பதுங்கியிருப்பதாக வனத்துறையினருக்கு தகவல் வந்தது. அதன்பேரில் பாம்புகளை மீட்பதில் கைதேர்ந்தவரான ஷேக் உசேன் பாம்பை மீட்க வரவழைக்கப்பட்டார். அவர் வைக்கோல் படப்புக்குள் பதுங்கியிருந்த பாம்பை தேடும்போது  அங்கே மேலும் 2 பாம்புகள் என மொத்தம் 3 நல்ல பாம்புகள் இருப்பது தெரியவந்தது.

image
இதனைத்தொடர்ந்து 3 நல்ல பாம்புகளையும் லாவகமாக பிடித்த ஷேக் உசேன்,  அவற்றினை சாக்குப்பையில் போட்டு எடுத்துக்கொண்டு சென்று கற்குடி வனப்பகுதியில் பத்திரமாக விட்டார்.

தென்காசி மாவட்ட கிராமங்களில் வீடுகளுக்குள் பாம்பு புகுந்துவிட்டால், கடையநல்லூரைச் சேர்ந்த ஷேக் உசேனை (26) அழைக்கின்றனர். அவர், லாவகமாக பாம்பைப் பிடித்து வனப்பகுதியில் விட்டு விடுகிறார். விலங்கியல் பட்டம் படித்துள்ள ஷேக் உசேன், இதுவரை ராஜ நாகம், நல்ல பாம்பு உள்ளிட்ட 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாம்புகளை உயிருடன் மீட்டுள்ளார்.

இதையும் படிக்க: சீமை கருவேலத்தால் விஷமாக மாறிவிடும் நிலத்தடி நீர் – பின்னணி, பாதிப்பு குறித்து ஓர் அலசல்Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.