ஸ்லிம் & ஸ்லீக்கான புதிய ரியல்மி லேப்டாப் – இதுல எல்லாமே டாப் ஸ்பெக்ஸ் தான்!

ஸ்மார்ட்போன் தயாரிப்பில் முன்னிலை வகித்து வரும் சீனாவின் ரியல்மி நிறுவனம், சமீபத்தில் புதிய ஸ்மார்ட்போன்களை வெளியிட்டது. அதனைத் தொடர்ந்து தற்போது புதிய லேப்டாப்பை இந்திய டெக் சந்தையில் களமிறக்கி உள்ளது.

வீட்டில் இருந்து பணிபுரியும் நபர்களை குறிவைத்து அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த லேப்டாப் பல சிறப்பம்சங்களைப் பெற்றுள்ளது. தெளிவான காட்சியை வழங்க 2K டிஸ்ப்ளே, விண்டோஸ் 11 இயங்குதளம், Intel 11 Gen புராசஸர், புதிய கூலிங் சிஸ்டம், DTS Surround ஒலித்திறன், சக்திவாய்ந்த பேட்டரி என அதிரடி அம்சங்களைக் கொண்டுள்ளது.

திறன்மிக்க லேப்டாப் வாங்க காத்திருந்த பயனர்கள் இதனை கருத்தில் கொள்ளலாம். விலையும் Mi Notebook Pro லேப்டாப்புக்கு இணையாகக் கொடுக்கப்பட்டுள்ளதால், இரு நிறுவன தயாரிப்புகளும் டெக் சந்தையில் நேரடி போட்டியை எதிர்கொள்ளும். இப்போது, ரியல்மி புதிய மடிக்கணினியின் சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கலாம்.

ரியல்மி புக் பிரைம் டிஸ்ப்ளே (Realme Book Prime Display)

புதிய ரியல்மி லேப்டாப்பில் 3:2 விகிதத்தில் இருக்கக்கூடிய 2K Ultra HD டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. sRGB Colour Gamut ஆதரவும் இந்த டிஸ்ப்ளே கொண்டுள்ளது. 400nits வரை பிரைட்னஸ் ஆதரவு உள்ளது. இதன் காரணமாக நீங்கள் வெட்ட வெளியில் இருந்து கூட லேப்டாப்பை பயன்படுத்த முடியும். இதில் 2160X1440 பிக்சல்கள் உள்ளது.

மலிவு விலை மோட்டோ போன் – ஆனா எந்த போனிலும் இல்லாத ஒரு ஸ்பெஷல் அம்சம் இருக்கு!

ரியல்மி புக் பிரைம் வடிவமைப்பு
(Realme Book Prime Design)

முற்றிலும் அலுமினியம் கொண்டு இந்த லேப்டாப் கட்டமைக்கப்பட்டுள்ளது. எனவே, பாலிகார்பனேட்டில் இருக்கும் வளைந்து கொடுக்கும் தன்மை இந்த லேப்டாப்பில் இருக்காது. புரியும்படி சொல்ல வேண்டும் என்றால், எம்ஐ நோட்புக் ப்ரோ லேப்டாப் போன்று வலுவானதாக இருக்கும்.

மிக மெலிதானதாக தயாரிக்கப்பட்டுள்ள இதன் தடிமன் 14.9mm தான் இருக்கிறது. இந்த லேப்டாப்பின் மொத்த எடை 1.37 கிலோவாக உள்ளது. ரியல் கிரீன், ரியல் ப்ளூ, ரியல் கிரே ஆகிய மூன்று வண்ணத் தேர்வுகளின் இது கிடைக்கிறது.

ரியல்மி புக் பிரைம் வன்பொருள் (Realme Book Prime Hardware)

கட்டமைப்பை உறுதிசெய்த ரியல்மி நிறுவனம், அதன் வன்பொருள் பக்கத்தையும் நேர்த்தியாக தேர்வு செய்துள்ளது.
Intel i5 11th Gen
புராசஸர் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது 10nm நானோ மீட்டரில் கட்டமைக்கப்பட்ட வில்லோ கோர் சிபியு என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த புராசஸர் 4.5Ghz ஜிகாஹெர்ட்ஸ் வரை வேகத்தை உமிழும் திறன் கொண்டது. புதிய Iris Xe கிராபிக்ஸ் எஞ்சின் இந்த ஹார்வேருடன் நிறுவப்பட்டுள்ளது. மொத்தமாக வன்பொருள் கட்டமைப்பை குளிரூட்ட Vapor Chamber Liquid Cooling முறை பயன்படுத்தப்பட்டுள்ளது.

ரியல்மி புக் பிரைம் ஸ்டோரேஜ் மற்றும் இதர அம்சங்கள் (Realme Book Prime Specifications)

புதிய
ரியல்மி லேப்டாப்
பொழுதுபோக்கு அம்சங்களை உள்ளடக்கி உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மேம்பாட்டுக்காக Dolby DTS Surround ஒலி அமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. 12 மணிநேரம் வரை தாங்கும் 54Wh பேட்டரி டைப்-சி ஆதரவுடன் வருகிறது.

டுயல் சேனல் 16GB LPDDR4X ரேம் மெமரி வரை வழங்கப்படுகிறது. சேமிப்பு மெமரியாக 512GB SSD ஸ்டோரேஜ் வரை இந்த லேப்டாப்பில் கொடுக்கப்பட்டுள்ளது. கூடுதலாக் இந்த லேப்டாப்பில் கைரேகை சென்சார், வைஃபை 6, தண்டர்போல்ட் 4 ஆகிய இணைப்பு ஆதரவுகளும் உள்ளன.

சூப்பர் 50:50MP கேமரா, 2K ரியாலிட்டி டிஸ்ப்ளே – Realme GT 2 pro அறிமுகம்!

ரியல்மி புக் பிரைம் விலை (Realme Book Prime Price in India)

இதன் 16ஜிபி + 512ஜிபி வேரியண்டின் விலை ரூ.64,999 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஏப்ரல் 13, 2022 அன்று பிளிப்கார்ட் மற்றும் ரியல்மி தளத்தில் விற்பனைக்கு வருகிறது. அறிமுக சலுகையாக HDFC Credit மற்றும் டெபிட் கார்ட் வாடிக்கையாளர்களுக்கு ரூ.3000 தள்ளுபடி வழங்கப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.