லக்னோ:
சமீப காலமாக இணையதளங்களை முடக்கம் செய்யப்படும் சம்பவம் உலக அளவில் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. இந்தியாவிலும் முக்கிய அரசு துறைகளின் இணையதளங்களை ஹேக்கர்கள் முடக்கி வருவதாக செய்திகள் வெளியாகி வந்துள்ளது.
நாட்டின் பல்வேறு மாநில அரசுகள் அந்தந்த மாநில முதல் மந்திரிகளுக்கென அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்குகள் உள்ளன.
இந்நிலையில், உத்தர பிரதேச மாநில முதல் மந்திரியின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளது.
உத்தர பிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்திற்கு அதிகாரப்பூர்வ டுவிட்ட கணக்கு உள்ளது. சிஎம்ஆபிஸ்உபி (CMOfficeUP) என்ற அந்த டுவிட்டர் கணக்கை 4 லட்சம் பேர் பின்பற்றுகின்றனர்.
முதல் மந்திரியின் டுவிட்டர் கணக்கில் இருந்து கடந்த ஒரு மணி நேரமாக பல டுவிட்டர் கணக்குகளை டேக் செய்து டுவிட்கள் பதிவிடப்பட்டு வருகிறது.
முதல் மந்திரியின் டுவிட்டர் கணக்கை ஹேக் செய்தது யார் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இதையும் படியுங்கள்…கர்நாடகாவில் ஏசி வெடித்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி