பெங்களூரு : போலி நம்பர் பிளேட் மூலம், 14 ஆண்டுகளாகவாகனத்தை ஓட்டி வந்த, எஸ்.பி., அலுவலக ஊழியர் பிடிபட்டார்.பெங்களூரு பனசங்கரி 2வது ஸ்டேஜில், ஜனவரி 25ல் முன்னால் சென்று கொண்டிருந்த மற்றொரு பைக் மீது வேறொரு இரு சக்கர வாகனம் மோதி விட்டு நிற்காமல் சென்றது.இதில், முன்னால் சென்ற பைக்கில் பின்புறம் அமர்ந்திருந்த நுார் ஜஹான், 50, சம்பவ இடத்திலேயே பலியானார்.
பைக் ஓட்டி சென்ற உறவினர் சயீத் சலிம் பாஷா, காயமடைந்தார்.சயீத் சலிம் பாஷாவிடம் போலீசார் விசாரித்தபோது, சம்பவத்தன்று தன் நண்பர் கிருஷ்ணா ஜோய்சின் வாகனத்தை தான் ஓட்டி சென்றதாக பாஷா தெரிவித்தார்.கிருஷ்ணா ஜோய்ஸ் வாகன எண்ணை போக்குவரத்து போலீசார் பரிசீலித்த போது, அது, ‘பஜாஜ் பாக்ஸ்’ பைக் வாகனத்தின் நம்பர் என்பதை கண்டுபிடித்தனர்.இதையடுத்து, கிருஷ்ணா ஜோய்சை விசாரணைக்கு ஆஜராகும்படி போலீசார் ‘சம்மன்’ அனுப்பினர்.
அவரிடம் நடத்திய விசாரணையில், 2008ல் ஷோரூமில் பைக் வாங்கிய கிருஷ்ணா ஜோய்ஸ், வாகனத்தை பதிவு செய்யாமல், போலி நம்பர் பிளேட் வைத்து பயணித்ததை ஒப்புக் கொண்டார்.இதையடுத்து, அவர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரிக்கின்றனர்.மாவட்ட போலீஸ் எஸ்.பி., அலுவலகத்தில், கிருஷ்ணா ஜோய்ஸ் ஊழியராக பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.
Advertisement