லக்னோ: உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் சர்வதேச விமான நிலையம் அமைக்க மத்திய, மாநில அரசுகள் முடிவு செய்தன. மர்யாத புருஷோத்தம் ஸ்ரீராம் சர்வதேச விமான நிலையம் என்ற பெயரில் இது அமையவுள்ளது.
விமான நிலையத்துக்கு 317.855 ஏக்கர் நிலத்தை உத்தரபிரதேச அரசு கையகப்படுத்தியது. இந்த நிலத்தை இந்திய விமான நிலைய ஆணையத்திடம் (ஏஏஐ) குத்தகைக்கு அளிக்கும் ஒப்பந்தம், முதல்வர் ஆதித்யநாத் முன்னிலையில் நேற்று கையெ ழுத்தானது. இந்த நிகழ்ச்சியில் முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசும்போது, “அடுத்த ஆண்டுக்குள் 5 சர்வதேச விமான நிலையங்களை நாட்டுக்கு நாம் வழங்குவோம். கடந்த 5 ஆண்டுகளில் விமான சேவை இணைப்பில் உத்தரபிரதேசம் வளர்ச்சி பெற்றுள்ளது’’ என்றார்.