Beast: ரிலீசுக்கு முன்பாகவே 'பீஸ்ட்' படம் புரிந்த சாதனை.. தளபதி வேற லெவல்பா..!

‘மாஸ்டர்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது
பீஸ்ட்
‘ படத்தில் நடித்து முடித்துள்ளார்
விஜய்
. கோலிவுட் வட்டாராமே எதிர்பார்த்து கொண்டிருந்த இந்தப்படத்தின் டிரெய்லர் கடந்த வாரம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. இந்நிலையில் ‘பீஸ்ட்’ படத்தின் முன்பதிவு அமோகமாக நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சன் பிக்சர்ஸ்
தயாரித்துள்ள ‘பீஸ்ட்’ படத்தில் விஜய்க்கு ஜோடியாக
பூஜா ஹெக்டே
நடித்துள்ளார். கோலமாவு கோகிலா, டாக்டர் படங்களை தொடர்ந்து விஜய் நடிப்பில் ‘பீஸ்ட்’ படத்தை இயக்கியுள்ளார்
நெல்சன் திலீப்குமார்
.இந்தப்படத்தில் மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ மற்றும் இயக்குநர் செல்வராகவன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி காதலர் தினத்தன்று வெளியான ‘பீஸ்ட்’ படத்தில் பர்ஸ்ட் சிங்கிளான “ஹலமித்தி ஹபிபோ” பாடல் பட்டி தொட்டியெங்கும் ஒலித்து வருகிறது. அதனை தொடர்ந்து விஜய் குரலில் வெளியான ‘ஜாலியோ ஜிம்கானா’ பாடலும் யூட்யூப்பில் பல கோடி பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்து வருகிறது.

கஷ்ட காலத்தில் போன் போட்டு உதவிய ரஜினி: பிரபல இயக்குனர் நெகிழ்ச்சி..!

அதன்பின்னர் கடந்த சனிக்கிழமை மாலை வெளியான ‘பீஸ்ட்’ பட டிரெய்லர் ஒரே நாளில் 30 மில்லியன்கள் பார்வையாளர்களால் பார்க்கப்பட்டு சாதனை படைத்தது. இந்நிலையில் ரிலீசுக்கு ஒரு வாரத்திற்கு முன்பாகவே ஆன்லைன் புக்கிங்கில் ‘பீஸ்ட்’ படம் ஹவுஸ்புல் ஆகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அண்ணாத்த, வலிமை, எதற்கும் துணிந்தவன் படங்களை எல்லாம் பின்னுக்கு தள்ளி ‘பீஸ்ட்’ படம் ப்ரீ புக்கிங்கில் மாஸ் காட்டி வருவதாக கூறப்படுகிறது. இந்த தகவல் தளபதி ரசிகர்கள் மத்தியில் கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

செல்வராகவன் ரோல் என்ன? பீஸ்ட் எந்த படத்தின் copy?

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.