PBKS vs GT LIVE score: ‘ஹாட்ரிக்’ வெற்றிக்கு குறி வைக்கும் குஜராத்; பஞ்சாப்புடன் இன்று மோதல்!

IPL 2022 PBKS vs GT LIVE score updates in tamil: 15வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் மும்பையில் இன்று நடைபெறும் 16வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் – குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. 2 வெற்றி, ஒரு தோல்வியுடன் உள்ள பஞ்சாப் அணி அதன் கடைசி ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான சென்னையை வீழ்த்திய உற்சாகத்தில் உள்ளது. அந்த அணியின் கேப்டன் மயங் அகர்வால் மற்றும் தொடக்க வீரர் ஷிகர் தவான் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை.

எனினும், பஞ்சாப் அணிக்கு பேட்டிங்கில் லிவிங்ஸ்டன், ராஜபக்சே, ஷாருக்கான், ஒடியன் சுமித், பந்து வீச்சில் ரபடா, ராகுல் சாஹர், அர்ஷ்தீப் சிங் உள்ளிட்ட வீரர்கள் பலம் சேர்க்கிறார்கள். தற்போது தனிமைப்படுத்துதலை முடித்து அணியில் இணைந்துள்ள அதிரடி பேட்ஸ்மேன் ஜானி பேர்ஸ்டோ தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகிறார். அவர் இன்றைய ஆட்டத்தில் களம் காணுவார் என்று தெரிகிறது.

நடப்பு தொடரில் தோல்வியை சந்திக்காத ஒரே அணியாக வலம் வரும் குஜராத் டைட்டன்ஸ் தற்போது ‘ஹாட்ரிக்’ வெற்றிக்கு குறி வைத்துள்ளது. அந்த அணியில் வேகப்பந்து வீச்சாளர்கள் முகமது ஷமி, லோக்கி பெர்குசன் மற்றும் பேட்டிங்கில் சுப்மான் கில், கேப்டன் ஹர்திக் பாண்ட்யா, ராகுல் திவேதியா நம்பிக்கை அளிக்கிறார்கள். மொத்தத்தில் சமபலம் பொருந்திய அணிகள் மோதும் இன்றைய ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது.

Indian Premier League, 2022Brabourne Stadium, Mumbai   08 April 2022

Punjab Kings 

vs

Gujarat Titans  

Match Yet To Begin ( Day – Match 16 ) Match begins at 19:30 IST (14:00 GMT)

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Live Updates

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.