கொழும்பு: இலங்கையில் பொருளாதார நிலைமை மோசமாக உள்ளதால் நிலைமையை சமாளிக்கவும், அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றவும் பொது மக்கள் தங்களிடம் உள்ள தங்கம் மற்றும் தங்க பொருட்களை விற்பனை செய்ய துவங்கி உள்ளனர்.
இலங்கையில் அன்னிய செலாவணி தட்டுப்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து அந்நாடு மிகப் பெரிய பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. இதனால் விலைவாசி விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது. காய்கறி, பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளதால் மக்கள் அவதிப்படுகின்றனர். இதனால், நாடு முழுவதும் போராட்டம் வெடித்துள்ளது. எவ்வளவு கட்டுப்பாடுகள் விதித்தாலும் அதனையும் மீறி மக்கள் போராட்டங்கள் தொடர்ந்துள்ளன.
நிதி நிலைமை மோசமாக உள்ளதால், அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்ற தங்களிடம் உள்ள தங்கம் மற்றும் தங்க பொருட்களை மக்கள் விற்க துவங்கி உள்ளனர். தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக 10 கிராம் 22 காரட் தங்கத்தின் விலை ரூ.1,85,000க்கு விற்பனையாவதாக தங்க நகைக்கடை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Advertisement