26 அமைச்சரவை அமைச்சர்கள் அந்தந்த இலாகாக்களில் இருந்து இராஜினாமா செய்வதாக அறிவிக்கும் அதிவிசேட வர்த்தமானியை ஜனாதிபதியின் செயலாளர் வியாழன் (7) வெளியிட்டுள்ளார்.
தொடர்ச்சியான பொருளாதார நெருக்கடிக்கு எதிராக மக்களின் சீற்றத்தைத் தொடர்ந்து, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் முழு அமைச்சரவையும் கடந்த ஞாயிற்றுக்கிழமை (3) அந்தந்த இலாகாக்களில் இருந்து விலகத் தீர்மானித்தது.
இதன்படி, பின்வரும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது அமைச்சுப் பதவிகளில் இருந்து விலகினர்,
நிமல் சிறிபால டி சில்வா தொழிலாளர் அமைச்சராகவும், எஸ்.பி. திஸாநாயக்க, கைத்தொழில் அமைச்சராக, ஜீ.எல்.பீரிஸ், வெளிவிவகார அமைச்சராக, பவித்ரா வன்னியாராச்சி மின்சக்தி அமைச்சராக, கல்வி அமைச்சராக தினேஷ் குணவர்தன, கடற்றொழில் அமைச்சராக டக்ளஸ் தேவானந்தா, எரிசக்தி அமைச்சராக காமினி லொக்குகே, வர்த்தக அமைச்சராக பந்துல குணவர்தன.
வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சராக சி.பி.ரத்நாயக்க, பொது சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சராக ஜனக பண்டார தென்னகோன், சுகாதார அமைச்சராக கெஹலிய ரம்புக்வெல்ல, நீர்ப்பாசன அமைச்சராக சமல் ராஜபக்ஷ, வெகுஜன ஊடக அமைச்சராக டலஸ் அழகப்பெரும, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ நெடுஞ்சாலை அமைச்சராகவும், பசில் ராஜபக்ஷ நிதி அமைச்சராகவும்.
சுற்றாடல் அமைச்சராக மஹிந்த அமரவீர, காணி அமைச்சராக எஸ்.எம். சந்திரசேன, விவசாய அமைச்சராக மஹிந்தானந்த அளுத்கமகே, நீர் வழங்கல் அமைச்சராக வாசுதேவ நாணயக்கார, பெருந்தோட்ட அமைச்சராக ரமேஷ் பத்திரன, சுற்றுலா அமைச்சராக பிரசன்ன ரணதுங்க, துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை அமைச்சராக ரோஹித அபேகுணவர்தன, இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சராக நாமல் ராஜபக்ச, நீதி அமைச்சராக அலி சப்ரி, பொது பாதுகாப்பு அமைச்சராக சரத் வீரசேகர மற்றும் போக்குவரத்து அமைச்சராக திலும் அமுனுகம ஆகியோர் பதவி விலகியதாக குறித்த வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
வர்த்தமானி எண். 2274/ 25 அரசியலமைப்பின் பிரிவு 47 (2) (b) இன் படி அமைச்சர்கள் தங்கள் பதவிகளை இராஜினாமா செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.