இசையமைப்பாளராக மாறிய காவல்துறை ஐஜி – வைரலாகும் வீடியோ!

புதுச்சேரி
டிவி நகரைச் சேர்ந்தவர் இசைக்கலைஞர் ராஜேஷ். இவர் பிரபல இசையமைப்பாளர் டிரம்ஸ் சிவமணியிடம் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது மகளின் மஞ்சள் நீராட்டு விழா புதுச்சேரியில் உள்ள சாய்பாபா திருமண நிலையத்தில் நடைபெற்றது.

இதில், புதுச்சேரி மாநில காவல்துறை ஐஜி சந்திரன், ஐபிஎஸ் கலந்துக்கொண்டார். விழாவில், மேடையில் இருந்த சிறுமியை வாழ்த்திய பிறகு பாட்டுக் கச்சேரி நடந்துக்கொண்டிருந்த பகுதிக்கு சென்றார்.

இசை நிகழ்ச்சியை பார்த்து உற்சாகமடைந்த ஐஜி சந்திரன் இசைக் கச்சேரி மேடைக்கு சென்று
எங்கேயும் காதல்
திரைப்படத்தில் இருந்து ’
நெஞ்சில் நெஞ்சில் இதோ இதோ
’ பாடலுக்கு நீண்ட நேரம்
கீபோர்டு
வாசித்து அசத்தினார்.

டெல்லியில் முகாமிட்டுள்ள ஆளுநர் தமிழிசை – பின்னணி என்ன?

காவல்துறை ஐஜி ஒருவர் திடீரென விழா மேடையில் கீபோர்டு வாசித்த நிகழ்வை விழாவிற்கு வந்த ஏராளமான பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தது மட்டுமில்லாமல் கைதட்டி தங்களது வாழ்த்துகளையும் தெரிவித்தனர். தற்போது இந்த வீடியோ பேஸ்புக், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழ்நாட்டில் உள்ள கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் கித்தார் இசைத்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரலானது. ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளும் இசையின் மீது அதிக காதல் கொண்டவர்கள் தான் என்பதை இந்த இரு சம்பவங்கள் உணர்த்துவதாக பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.