ரஷ்யவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்க இந்தியா ரூபாயில் ஒப்பந்தம் செய்துள்ள நிலையில், தற்போது சீனாவுடன் அதே பாணியை பின்பற்றியுள்ளது. கச்சா எண்ணெய் மற்றும் நிலக்கரிக்கு அந்த நாட்டு கரன்சியான யுவானின் மதிப்பில் ஒப்பந்தம் செய்துள்ளது.
அமெரிக்கா ரஷ்யாவினை பொருளாதார ரீதியாக தனிமைபடுத்த நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், பல நாடுகளை அணி சேர்த்து வருகின்றது.
பல நாடுகளையும் ரஷ்யாவுக்கு எதிராக அழுத்தத்தினை கொடுக்க நிர்பந்தம் செய்து வருகின்றது.
கச்சா எண்ணெய் விலை பெரும் சுமை.. ஜிடிபி 7.2% ஆக சரியும்.. ஆர்பிஐ சக்திகாந்த தாஸ் அறிவிப்பு..!
பல நாடுகளும் தடை
இதற்கிடையில் இந்தியா ரஷ்யாவிடம் இருந்து ரூபாயில் எண்ணெய் வாங்க ஒப்பந்தம் செய்துள்ளது. இதற்கிடையில் சீனாவும் அந்த நாட்டு கரன்சியான யுவானின் மதிப்பில் செலுத்த ஒப்பந்தம் செய்துள்ளது.
ரஷ்யா – உக்ரைன் போருக்கு மத்தியில் பதிலடி கொடுக்கும் வகையில், ரஷ்யா மீது பல நாடுகளும் பல தடைகளை விதித்து வருகின்றன. இதற்கிடையில் ரஷ்யாவின் முக்கிய வணிகமான கச்சா எண்ணெய் , நிலக்கரிக்கு தடை விதித்துள்ளன. சில நாடுகள் தடை விதிக்க திட்டமிட்டு வருகின்றன.
ரஷ்யாவின் முயற்சிகள்
இந்த நிலையில் சரிந்து வரும் பொருளாதாரத்தினை மேம்படுத்த ரஷ்யா பல்வேறு முயற்சிகளை கையாண்டு வருகின்றது. அதில் மலிவு விலையில் கச்சா எண்ணெய் விலை, இந்தியாவுக்கு ரூபாயிலும், சீனாவுக்கு யுவானியும் சப்ளை செய்ய ஒப்பந்தம் செய்துள்ளது. இதனால் ரஷ்யாவின் பொருளாதாரம் அமெரிக்க நினைப்பதுபோல முழுமையாக முடங்கி விடாது.
ரஷ்யாவினை பாதிக்காது?
மாறாக பெரியளவில் இல்லாவிட்டாலும் நிச்சயம் ரஷ்யாவில் பணப்புழக்கம் என்பது மேம்படும். இதனால் மற்ற நாடுகள் விதித்த பொருளாதார தடையானது, பெரியளவில் ரஷ்யாவினை பாதிக்காது.
சீன நிறுவனங்களுக்கு அனுமதி
ஏற்கனவே பல சீன நிறுவனங்களுக்கு சீன கரன்சியில் நிலக்கரியினை வாங்க அனுமதி தரப்பட்டுள்ளது. இது இரும்பு உற்பத்தி மற்றும் மின் நிலையங்களுக்கு தேவையான நிலக்கரியினை யுவானில் வாங்கிக் கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. இது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் தடைகளுக்கு மத்தியில் இப்படி ஒரு நடவடிக்கையினை பின்பற்றியுள்ளது.
யுவானின் ஆதீக்கம்
சர்வதேச வர்த்தகத்தில் டாலரின் மதிப்பு நீண்டகாலமாக ஆதீக்கம் செலுத்தி வரும் நிலையில், இதற்கு மாற்றாக சீனாவின் யுவான் மாறிக் கொண்டுள்ளது. யுவானில் சீனா மட்டுமே ஆதீக்கம் செலுத்தினாலும், இந்த நெருக்கடியான சூழலை தனக்கு சாதகமாக சீனா பயன்படுத்திக் கொண்டு வருகின்றது.
China is buying Russian oil and coal with its own currency
China is buying Russian oil and coal with its own currency/இந்தியாவினை தொடரும் சீனா.. பைடனின் திட்டம் கைகொடுக்கவில்லையே.. ரஷ்யாவுக்கு நல்லது தான்!