பாகிஸ்தானை மிரட்டுவது போல இந்தியாவை எந்த ஒரு வல்லரசு நாடும் மிரட்ட முடியாது என்று அந்நாட்டின் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.
இன்று இம்ரான்கான் அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீது நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடைபெற உள்ள நிலையில் நாட்டு மக்களிடையே நேற்று அவர் உரை நிகழ்த்தினார். அப்போது பாகிஸ்தானின் ஜனநாயகம் ஒரு கேலிக்கூத்து என்றும் எந்த நாட்டிலும் ஜனநாயகத்தை ராணுவத்தால் நீண்ட காலம் பாதுகாக்க முடியாது என்றும் கூறினார்.
மக்கள்தான் ஒரு நாட்டின் இறையாண்மையைக் காக்க முடியும் என்றும் கருத்து தெரிவித்தார். நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடத்த உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பால் தாம் ஏமாற்றம் அடைந்திருப்பதாகக் கூறிய அவர் தமது அரசு கவிழ்ந்து புதிய அரசு அமைப்பதை ஏற்க முடியாது என்றார்.
மக்கள் வீதிகளில் இறங்கி போராட வேண்டும் என்றும் இம்ரான் கான் அழைப்பு விடுத்தார்.