‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் வழங்கும் ‘நமது பூமி நமது சுகாதாரம்’ ஆன்லைன் விழிப்புணர்வு நிகழ்ச்சி: நாளை பகல் 12 மணிக்கு நடைபெறுகிறது

சென்னை: உலக சுகாதார தினத்தை முன்னிட்டு ‘இந்து தமிழ் திசை’ சார்பில் ‘நமது பூமி நமது சுகாதாரம்’ எனும் ஆன்லைன் சுகாதார விழிப்புணர்வு நிகழ்வுநாளை (ஏப்.10) மதியம் 12 மணிக்கு நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வில் தமிழக மக்கள் நல்வாழ்வு மற்றும் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்கிறார்.

கரோனா போன்ற பெருந்தொற்று பரவல் காலங்களில் மக்களிடம் சுகாதார விழிப்புணர்வை உண்டாக்கும் நோக்கில் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் பல்வேறு சுகாதாரம் தொடர்பான நிகழ்வுகளை ஆன்லைனில் முன்னெடுத்து நடத்தியது. அதன் தொடர்ச்சியாக, உலக சுகாதார தினத்தையொட்டி (ஏப்.7) ‘நமது பூமி நமது சுகாதாரம்’ எனும் ஆன்லைன் சுகாதார விழிப்புணர்வு நிகழ்வு நாளை (ஏப்.10) மதியம் 12 மணிக்கு நடை பெறவுள்ளது.

இந்த நிகழ்வில் தமிழக மக்கள் நல்வாழ்வு மற்றும் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, ‘நலமான தமிழகமே வளமான தமிழகம்’ எனும் தலைப்பில் உரையாற்றுகிறார்.

மேலும், சிம்ஸ் மருத்துவமனை சமூக மருத்துவம் மற்றும் தொற்றுநோய்கள் துறை தலைவர் டாக்டர் பெ.குகானந்தம், உடல் ஆரோக்கியம் மற்றும் சுகாதார செயல்பாடுகள் குறித்தும், டெட்டால் பநேகா ஸ்வஸ்த்இந்தியா சார்பில் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டுள்ள சுகாதார விழிப்புணர்வு செயல்பாடுகள் பற்றி டாக்டர்ஜோட்ஸ்னா ஆகியோர் உரையாற்றவுள்ளனர். இந்நிகழ்வில் பங்கேற்கவிரும்புவோர் https://www.htamil.org/00441 என்ற லிங்க்கில் பதிவுசெய்து கொள்ளவும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.