இந்த ஆண்டு மொத்தம் பத்து லட்சம் பேருக்கு ஹஜ் யாத்திரை செய்ய அனுமதி கொடுப்பதாக சவூதி அரேபியா இன்று (2022, ஏப்ரல் 7, சனிக்கிழமை) அறிவித்தது.
கொரோனா வைரஸின் தாக்கத்திற்குப் பிறகு தொற்றுநோய் கட்டுப்பாடுகள் தீவிரமாக இருந்த நிலையில், இரண்டு ஆண்டுகளாக இஸ்லாமியர்களின் புனித யாத்திரையும் முடங்கியது.
இந்த ஆண்டிற்கான ஹஜ் புனித யாத்திரை பற்றி தகவல் தெரிவித்த சவுதி அரேபியாவின் ஹஜ் அமைச்சகம்,, “இந்த ஆண்டு ஹஜ் பயணத்திற்கு வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு யாத்திரீகர்கள் என மொத்தம் ஒரு மில்லியன் இஸ்லாமியர்களுக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளது.
HAJJ NEWS: THREAD
The number of pilgrims this year has increased to one million from inside and outside the Kingdom pic.twitter.com/7RhjqfPSGB
— (@HaramainInfo) April 9, 2022
இஸ்லாத்தின் ஐந்து தூண்களில் ஒன்றான ஹஜ்ஜை அனைத்து முஸ்லிம்களும் தங்கள் வாழ்நாளில் ஒருமுறையாவது முறைப்படை மேற்கொள்ள வேண்டும். பொதுவாக உலகின் மிகப்பெரிய மத யாத்திரைகளில் ஒன்றான ஹஜ் புனிதப் பயணத்தில் 2019 இல் சுமார் 2.5 மில்லியன் மக்கள் பங்கேற்றனர்.
ஆனால் 2020 இல் கொரோனா வைரஸ் தொற்றுநோய் தொடங்கிய பிறகு, சவுதி அதிகாரிகள் 1,000 யாத்ரீகர்களை மட்டுமே பங்கேற்க அனுமதித்தனர்.
மேலும் படிக்க | கொரோனாவுக்கு மத்தியில் மெக்காவில் பாதுகாப்பான ஹஜ் யாத்திரை
அடுத்த ஆண்டு அதாவது 2021இல், லாட்டரி மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட 60,000 பேர் யாத்திரைக்கு அனுமதிக்கப்பட்டனர். ஹஜ் யாத்திரைக்கு விண்ணப்பித்திருந்தவர்களில் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களில் இருந்து லாட்டரி குலுக்கல் மூலம் அறுபதாயிரம் பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இந்த ஆண்டு ஹஜ் யாத்திரையை 65 வயதுக்குட்பட்டவர்கள் மட்டுமே மேற்கொள்ள முடியும், விண்ணப்பிக்கும் இஸ்லாமியர்கள் தடுப்பூசி போடப்பட்டிருக்க வேண்டும் என்று சவுதி அரேபியா தெரிவித்துள்ளது தடை செய்யப்பட்ட வெளிநாடுகளில் உள்ள முஸ்லிம்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
Saudi one million Ḥujjaj will be able to perform Ḥajj this year . pic.twitter.com/YOF5edDDN0
— (@Alhamdhulillaah) April 9, 2022
சவுதி அரேபியாவிற்கு வெளியில் இருந்து வருபவர்கள், பயணத்திற்கு 72 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட கோவிட்-19 PCR சோதனையை காட்ட வேண்டும். அதில் அவர்களுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்பது குறிப்பிட்டிருக்க வேண்டும் என்று சவுதி அரசு கூறுகிறது.
“உலகளவில் அதிகபட்ச முஸ்லிம்கள் ஹஜ் செய்ய முடியும் என்பதை உறுதிப்படுத்தும் அதே வேளையில், யாத்ரீகர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அரசாங்கம் விரும்புகிறது” என்று சனிக்கிழமையன்று வெளியிடப்பட்ட ஹஜ் தொடர்பான அறிக்கை கூறுகிறது
இஸ்லாமியர்களின் புனித நகரமான மெக்கா மற்றும் மேற்கு சவூதி அரேபியாவின் சுற்றுப்புறப் பகுதிகளில் ஐந்து நாட்களில் நிறைவு செய்யப்படும் மதச் சடங்குகள் ஹஜ் யாத்திரை என்று அழைக்கப்படுகிறது.
ஹஜ் புனிதப் பயணத்திற்கான ஏற்பாடுகளை சிறப்பாக சவுதி ஆட்சியாளர்களுக்கு கௌரவமான விஷயமாகும், ஏனெனில் இஸ்லாத்தின் புனிதமான இடங்களின் பாதுகாவலர் என்ற கெளரவம், அந்நாட்டின் மிக சக்திவாய்ந்த ஆதாரமாகும்.
மேலும் படிக்க | ஹஜ் வழிகாட்டுதல்கள்: ஆன்லைன் விண்ணப்ப செயல்முறை