இனி வாழைப்பழத் தோலை தூக்கி எறியாதீங்க.. பளபளப்பான சருமத்துக்கு இப்படி பயன்படுத்துங்க!

வாழைப்பழம் நம் உடலுக்கும், சருமத்திற்கும் மிகவும் ஊட்டமளிக்கிறது, ஆனால் வாழைப்பழத் தோலிலும் கூட வைட்டமின் பி 6, பி 12 விகிதங்கள் இருப்பதால் உங்கள் சருமத்திற்கு அதிக நன்மைகள் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

அவற்றில் புரதம், நார்ச்சத்து, மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் போன்ற மேக்ரோநியூட்ரியண்ட்கள் நிறைந்துள்ளன, அவை உங்கள் சருமத்தை இளமையாகவும், ஊட்டமாகவும், மிருதுவாகவும் மாற்ற உதவுகின்றன.

1. வாழைப்பழ தோல் மாஸ்க்

– ஒரு வாழைப்பழத்தை எடுத்து சிறிய துண்டுகளாக நறுக்கவும்,

– ஒரு மிக்ஸியில் முழு வாழைப்பழத் தோல், வாழைப்பழத்தின் இரண்டு துண்டுகள் போட்டு அரைக்கவும்.

– வாழைத்தோல் விழுதில், 2 டேபிள்ஸ்பூன் பால் சேர்த்து மீண்டும் அனைத்தையும் ஒன்றாக அரைக்கவும். இப்போது மாஸ்க் ரெடி.

– இந்த பேஸ்டை உங்கள் ஃபிரிடிஜில் 10-15 நிமிடங்கள் வைத்து, பின்னர் உங்கள் முகம் மற்றும் கழுத்து முழுவதும் தடவவும்.

-இதை 20 நிமிடம் விட்டு, பின் குளிர்ந்த நீரில் கழுவவும்.

2.வாழைப்பழத் தோல் ஸ்க்ரப்பர்

-வாழைத்தோலை சிறிய பகுதிகளாக நறுக்கி, முகம் மற்றும் கழுத்து முழுவதும் தேய்க்கவும்.

-வாழைத்தோல், உங்கள் கொலாஜனை அதிகரிக்கவும், கருவளையங்களை குறைக்கவும், இறந்த சருமத்தை அகற்றவும், உங்கள் சருமத்தில் உள்ள எண்ணெய் சுரப்பிகளை கட்டுப்படுத்தவும், உங்கள் துளைகளை இறுக்கவும் உதவுகிறது.

இதை 20-30 நிமிடங்கள் விட்டு, சூடான துணியால் துடைக்கவும்.

3. பற்களை வெண்மையாக்கும்

-வாழைத்தோலில் ஈறு அழற்சி மற்றும் பீரியண்டோன்டிடிஸ் போன்றா பீரியண்டால்ட் நோய்களுக்கு எதிராகப் போராடும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளன.

– வாழைப்பழத் தோலின் சில துண்டுகளை எடுத்து உங்கள் பற்கள் மற்றும் ஈறுகள் முழுவதும் தேய்க்கவும். இதை ஒரு வாரம் தொடர்ந்து செய்தால், பற்கள் வெண்மையாக்க உதவும்.

4. மிருதுவான உதடுகள்

-வாழைத்தோலில் வெண்மையாக்கும் பண்புகள் மற்றும் ஏராளமான ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன, அவை உங்கள் உதடுகளை பளபளப்பாக மாற்றும்.

குளிர்ந்த வாழைப்பழத்தோலை ஒரு வாரத்திற்கு தினமும் 10 நிமிடங்கள் உதடுகளில் தடவி, வித்தியாசத்தை நீங்களே பாருங்கள்.

-வாழைத்தோலை இரண்டு சிறிய பகுதிகளாக வெட்டி 10-15 நிமிடங்களுக்கு உங்கள் ஃப்ரீசரில் வைக்கவும். 20 நிமிடங்களுக்கு உங்கள் கண்களுக்குக் கீழே தோலைப் பயன்படுத்துங்கள். வாரத்திற்கு மூன்று முறை இதை மீண்டும் செய்யவும்.

– வாழைப்பழத் தோல்கள் கருவளையங்களைக் குறைப்பதோடு மட்டுமல்லாமல், உங்கள் கண்களில் இருந்து வீக்கத்தையும் நீக்கும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.