வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
இஸ்லாமாபாத்: இம்ரான் கான் புத்தி ஸ்வாதீனமாக இல்லை என, பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மனைவி மரியம் கூறியுள்ளார்.
இம்ரான் கான் அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தன. கடந்த 3ம் தேதி நம்பிக்கையில்லா தீர்மானம் மீது ஓட்டெடுப்பு நடக்க இருந்த நிலையில், துணை சபாநாயகர் சுரி நிராகரித்தார். இது தொடர்பாக தாமாக முன்வந்து விசாரணை நடத்திய உச்சநீதிமன்றம், துணை சபாநாயகர் முடிவை ரத்து செய்ததுடன், இன்று ஓட்டெடுப்பு நடத்தவும் உத்தரவிட்டது.
இன்று பார்லிமென்ட் கூடி தீர்மானத்தின் மீது விவாதம் துவங்கிய நிலையில், பார்லிமென்ட் பிற்பகல் வரை ஒத்திவைக்கப்பட்டது. எதிர்க்கட்சிகள் ஒன்று கூடி ஆலோசனை நடத்தின.இந்நிலையில், முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் மனைவி மரியம் கூறியதாவது: இம்ரான் கான் புத்திஸ்வாதீனமாக இல்லை. மனநோயாளி போல் செயல்படுகிறார்.அவர், ஒட்டு மொத்த நாட்டையே பிணைய கைதி போல் மாற்றியுள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement