உக்ரைன் கிராமட்டோர்ஸ்க் நகர ரயில் நிலையத்தில் நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் குழந்தைகள், பெண்கள் உள்பட 50 பேர் கொல்லப்பட்டனர்.
ஏறத்தாழ 4 ஆயிரம் பேர் மீட்பு பணிகளுக்காக ரயில் நிலையத்தில் காத்திருந்த போது 2 ஏவுகணைகள் தாக்கியதாக கூறப்படுகிறது. 50 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஏவுகணைத் தாக்குதலுக்கு தங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என ரஷ்யப் பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.
சம்பவத்தின் போது கிரமடார்ஸ்க் நகரை தாக்க ரஷ்யப் படைகளுக்கு உத்தரவிடவில்லை என்று ரஷ்ய பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது. அதேநேரம் சம்பவ இடத்தில் தாக்குதலின் போது உக்ரைன் வீரர்களும் இல்லை என அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.