உக்ரைனுக்கு கனடா மற்றும் ஐரோப்பா வழங்கிய வாக்குறுதி! போரில் வெல்வதே முக்கியம்!


ரஷ்ய போரினால் உக்ரைனில் இருந்து வெளியேறிய மற்றும் அந்த நாட்டிற்குள்ளேயே இடம் மாறிய பொதுமக்களுக்கு உதவுவதற்காக சுமார் 9.1 மில்லியன் யூரோக்களை கனடா அரசாங்கத்துடன் இணைந்து ஐரோப்பிய ஆணைக்குழு வழங்குவதாக உறுதி அளித்துள்ளது.

உக்ரைன் ரஷ்யா இடையே நடைபெற்று வரும் போரில் கிட்டத்தட்ட 4 மில்லியன் மக்கள் சொந்த தாய்நாட்டை விட்டு வெளியேறி ஐரோப்பிய நாடுகளில் பெரும்பாலும் அகதிகளாக குடியேறியுள்ளனர், மேலும் 6.5 மில்லியன் மக்கள் தங்களின் உயிர்களை பாதுகாத்து கொளவதற்காக தங்களுக்கு சொந்தமான இடங்களை விட்டு வெளியேறி நாட்டிற்குள்ளேயே குடிபெயர்ந்துள்ளனர்.

REUTERS/Kacper Pempel

இந்தநிலையில் இன்று(சனிக்கிழமை) போலந்தின் வார்சா பகுதியில் நடைபெற்ற நிதி சேகரிப்பு கூட்டத்தில் கனடா அரசாங்கத்துடன் இணைந்து ஐரோப்பிய ஆணைக்குழு சுமார் 9.1 மில்லியன் யூரோக்களை ரஷ்ய போரினால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைன் மக்களுக்கு வழங்குவதாக உறுதியளிக்கப்பட்டுள்ளது.

இந்த 9.1 மில்லியன் யூரோக்களில் 1.8 மில்லியன் யூரோக்கள் உக்ரைன் நாட்டிற்குள்ளேயே இடம்பெயர்ந்துள்ள பொதுமக்களுக்கு உதவுவதற்காக ஒதுக்க திட்டமிட்டு இருப்பதாகவும், மீதமுள்ள 7.3 மில்லியன் யூரோக்கள் உக்ரைனை விட்டு வெளியேறி ஐரோப்பிய நாடுகளில் அகதிகளாக குடியேறியுள்ள பொதுமக்களுக்கு உதவதற்காக ஒதுக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

REUTERS/Kacper Pempel

இதையடுத்து போலந்தின் வார்சா நகரில் நடைபெற்ற உக்ரைனுக்காக நிற்போம் என்ற நிதி சேகரிப்பு கூட்டத்தில் பேசிய ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன், “நாங்கள் உக்ரைனுடன் நிற்கிறோம், உக்ரைனில் இருந்து வெளியேறிய பொதுமக்களுடன் நிற்கிறோம், ஆனால் அனைத்தையும் விட இந்த போரில் உக்ரைன் வெற்றிபெற வேண்டும் அதுதான் மிக முக்கியம்” என தெரிவித்துள்ளார்.

போருக்கு மத்தியில் கீவிற்கு சென்று ஜெலன்ஸ்கியை நேரில் சந்தித்த போரிஸ்! வெளியான ஆதாரம்

REUTERS/Kacper Pempel

இந்த கூட்டத்தில் ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன், போலந்து ஜனாதிபதி Andrzej Duda இவர்களுடன் உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி மற்றும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இருவரும் காணொளி வாயிலாக இணைந்து இருந்தனர்.  



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.