வாஷிங்டன்:
உக்ரைன் மீது ரஷியா 45-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. தலைநகர் கீவ், மரியுபோல், கார்கீவ், கார்சன் உள்பட பல்வேறு நகங்களில் ரஷிய படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. ரஷிய படைகளின் தாக்குதலுக்கு உக்ரைன் ராணுவமும் பதிலடி கொடுத்து வருகிறது.
இந்தப் போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ராணுவ ஆயுதங்கள், தளவாடங்கள் உள்ளிட்ட பல்வேறு உதவிகளை வழங்கி வருகிறது.
இந்நிலையில், ரஷியாவுக்கு எதிரான இந்த போரில் உக்ரைன் வெற்றிபெற நாங்கள் விரும்புகிறோம் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக, அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் செய்தித்தொடர்பு செயலாளர் ஜான் கெர்பி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தங்கள் சொந்த நாட்டு இறையாண்மையைப் பாதுகாப்பதற்காக உக்ரைன் 8 ஆண்டுகளாக போராடி வருகிறது. எனவே, இந்தப் போரில் உக்ரைன் வெற்றிபெற வேண்டுமென நாங்கள் விரும்புகிறோம்.
இந்தப் போரில் புதினும், ரஷியாவும் தோல்வியடைவதை பார்க்க நாங்கள் விரும்புகிறோம். உக்ரைனிய மக்களின் உயிர்கள் அழிக்கப்பட்டுள்ளது. இந்தப் போர் விரைவில் முடிவுக்கு வர வேண்டும் என விரும்புகிறோம் என தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்…கொலம்பியாவில் தங்க சுரங்கத்தில் நிலச்சரிவு- 11 தொழிலாளர்கள் பலி