உக்ரைன் போரின் பரபரப்பு பல நாடுகளையும் தொற்றிக்கொள்ளத் தொடங்கியுள்ளது.
போர் வந்தால் நிலைமையை சமாளிப்பதற்காக உணவுப் பொருட்கள், மருத்துவ உபகரணங்கள், பாதுகாப்பு உடைகள், மாஸ்குகள், மருந்துகள் உட்பட, அத்தியாவசியப் பொருட்களை சேமித்துவைக்கத் துவங்கியுள்ளதாக ஜேர்மன் உள்துறை அமைச்சர் Nancy Faeser தெரிவித்துள்ளார்.
அத்துடன், பதுங்கு குழிகளை வலிமைப்படுத்துதல், பூமிக்கடியில் வாகன நிறுத்தங்கள், சுரங்க ரயில் நிலையங்கள் ஆகியவற்றை பாதுகாப்பாக தங்கும் இடங்களாக மாற்றுதல் முதலான பணிகளும் மும்முரமாக நடந்துவருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
தற்போதைக்கு ஜேர்மனியில் பொதுமக்களுக்கான புகலிடங்கள் 599 உள்ளதாகவும், அவற்றை மேலும் அதிகரிப்பது குறித்து ஆராய்ந்துவருவதாகவும் தெரிவித்துள்ள Faeser, ஆனாலும் தேசிய அளவில் இன்னமும் ஏராளான வேலைகள் இருப்பதாக தெரிவித்துள்ளார்.