உ.பி. முதல்-மந்திரியின் டுவிட்டர் கணக்கு 'ஹேக்’ செய்யப்பட்டது…!

லக்னோ,
நாட்டின் பல்வேறு மாநில அரசுகள் அந்தந்த மாநில முதல்-மந்திரிகளுக்கென்று அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்குகள் உள்ளன.
அந்த வகையில் உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்திற்கு அதிகாரப்பூர்வ டுவிட்ட கணக்கு உள்ளது. சிஎம்ஆபிஸ்உபி (CMOfficeUP) என்ற அந்த டுவிட்டர் கணக்கை 4 லட்சம் பேர் பின்பற்றுகின்றனர்.

இந்நிலையில், உத்தரபிரதேச முதல்-மந்திரியின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளது. கடந்த 1 மணி நேரத்திற்கு டுவிட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளது. முதல்-மந்திரியின் டுவிட்டர் கணக்கில் இருந்து கடந்த ஒரு மணி நேரமாக பல டுவிட்டர் கணக்குகளை டேக் செய்து ’டூவிட்’கள் பதிவிடப்பட்டு வருகிறது.  
 
ஹேக் செய்யப்பட்ட முதல்-மந்தியின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்கை மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டுவர முயற்சிகள் நடைபெற்று வருகிறது. மேலும், முதல்-மந்திரியின் முடக்கப்பட்ட டுவிட்டர் கணக்கை ஹேக் செய்த ஹேக்கர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.