சென்னை:
தென்மண்டல இந்திய தொழில்துறை கூட்டமைப்பு சார்பில் நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில், தென் இந்திய ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு மாநாடு நடைபெற்று வருகிறது.
இதில் “நவீன ஊடகங்களின் வளர்ச்சியால் அச்சு ஊடகம் சந்திக்கும் சவால்கள் மற்றும் அதை எதிர்கொள்ளும் திட்டங்கள்” குறித்த குழு விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில் தினத்தந்தி குழும இயக்குநர் பா. சிவந்தி ஆதித்தன் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:
செய்தித்தாள் விற்பனை உலகளவில் குறைந்தாலும், செய்திக்கு என்றுமே பஞ்சம் வராது.
அச்சு ஊடகங்கள் மிகுந்த நம்பகத்தன்மை உடையவை, தனி அடையாளம் கொண்டவை.
1990-ம் ஆண்டுக்கு பிறகு பிரேக்கிங் செய்திகளை டிவி சேனல்கள் மட்டுமே கொடுத்தன. தற்போது வலைதளங்களும் அவற்றை கொடுத்து வருகின்றன.
இதை உடைத்து மீண்டும் செய்தித்தாள் பிரேக்கிங் செய்தி கொடுப்போம்.
வெப் 3.0 தான் அடுத்தகட்ட தொழில்நுட்பம். நமது நாடு அந்தத் தொழில்நுட்பத்தை விரைவில் பயன்படுத்த உள்ளது.
இதையும் படியுங்கள்…பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து மக்கள் நீதி மய்யம் போராட்டம்