ஏலியனுடன் உறவு கொண்டதன் காரணமாக பெண்ணொருவர் கர்ப்பமானார் என அமெரிக்கப் புலனாய்வுத் துறை சேகரித்து வைத்துள்ள தகவல்களின் ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தகவலானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தகவல் அறியும் உரிமைக் கோரிக்கையின் ஒரு பகுதியாக இந்த அறிக்கை பெறப்பட்டது.
UFOs என்று குறிப்பிடப்படும் ஏலியன்கள் தொடர்பான ஆவணங்களையே அமெரிக்கப் புலனாய்வுத் துறை வெளியிட்டுள்ளது.
அமெரிக்காவில் பல சாட்சிகள் அளித்த தகவலின்படி பல UFOs மனிதர்களுடன் உடலுறவு கொண்டதாக அமெரிக்கப் புலனாய்வுத் துறை ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறிப்பாக, இந்த ஏலியன் மூலம் பெண் ஒருவர் கர்ப்பமாகி உள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
இவை அனைத்தும் பென்டகன் ஆவணங்களில் பதிவு செய்யப்பட்டு உள்ளதாக தி சன் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
‘Anomalous Acute and Subacute Field Effects on Human and Biological Tissues’ என்ற தலைப்பில் அறிக்கையானது அமானுஷ்ய அனுபவங்களைக் கொண்ட மனிதர்களின் உடல்நல பாதிப்புகளை ஆராய்கிறது.
விண்ணில் இருந்து வரும் மர்மப் பொருட்கள் அல்லது ஏலியன் போன்ற அமைப்புகளால் மனிதர்களின் உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து இதில் விவரிக்கப்பட்டுள்ளது.
கடத்தல், கர்ப்பம், பாலியல் சம்பவங்கள், டெலிபதி போன்ற வினோதமான நிகழ்வுகள் குறித்தும் அதில் கூறப்பட்டுள்ளது.
UFOக்களுக்கும் மனிதர்களுக்கும் இடையிலான ஐந்து பாலியல் சந்திப்புகள் பதிவாகியுள்ளதாக ஆய்வு முடிவுகள் கூறுகிறது.
இதுபோன்ற ஏலியன்கள் அமெரிக்க நலன்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கலாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
பென்டகனின் ரகசிய UFO திட்டத்துடன் தொடர்புடைய 1500 பக்கங்களுக்கும் மேலான DIA ஆவணங்களின் ஒரு பகுதியான அறிக்கை இது என்பது குறிப்பிடத்தக்கது.