ஐபிஎல் கிரிக்கெட்: பெங்களூரு அணிக்கு 152 ரன்கள் இலக்கு

புனே:
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய 18-வது லீக் ஆட்டத்தில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும்  பாப் டு பிளிஸ்சிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதுகின்றன. 
புனேவில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி கேப்டன் டு பிளிஸ்சிஸ் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதன்படி, மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது.
அந்த அணியின் துவக்க வீரர் இஷாந்த் கிஷன் 26 ரன்னுக்கு அவுட்டானார். கேப்டன் ரோகித் சர்மாவும் 26 ரன்கள் எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை பறிகொடுத்தார். 
அடுத்து களம் இறங்கிய சூரியகுமார் யாதவ் 37 பந்துகளில் 5 பவுண்டரி, 6 சிக்ஸர்களுடன் 68 ரன்களை குவித்து கடைசி வரை களத்தில் நின்றார். 
மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில்  6 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் குவித்தது. இதையடுத்து 152 ரன்கள் என்ற இலக்கை நோக்கி பெங்களூரு அணி விளையாடுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.