94வது ஆஸ்கர் விருது விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் சமீபத்தில் நடந்து முடிந்தது. இந்த நிகழ்ச்சியை நகைச்சுவை நடிகரான கிறிஸ் ராக் தொகுத்து வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் சிறந்த நடிகருக்கான விருதை பெற தனது மனைவி ஜடா பிங்கெட்டுடன் வந்திருந்தார்
வில் ஸ்மித்
.
அப்போது ஜடா பிங்கெட்டின் ஹேர் ஸ்டைலை கேலி செய்து பேசினார் கிறிஸ் ராக். இதனால் கடுப்பான வில் ஸ்மித், ஆஸ்கர் மேடைக்கு சென்று கிறிஸ் ராக்கின் கன்னத்தில் அறைந்தார். இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதையடுத்து தான் நடந்து கொண்ட விதத்திற்காக மன்னிப்பு கோரினார் வில் ஸ்மித். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய
ஆஸ்கர் அகாடமி
வில் ஸ்மித் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்தது. இந்நிலையில் ஆஸ்கர் விருது மற்றும் பிற விருது விழாக்களில் பங்கேற்க ஆஸ்கர் அமைப்பு தடை விதித்துள்ளது.
இதுதொடர்பாக ஆஸ்கர் அகாடமி அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது. அதில், “ஸ்மித் ஆஸ்கர் மேடையில் நடந்து கொண்ட விதம் ஏற்றுக்கொள்ள முடியாதது ஆகும். இந்த எதிர்ப்பாராத சம்பவத்துக்காக நாங்கள் வருந்துகிறோம். அந்த அசாதாரண சூழலிலும் அமைதி காத்த கிறிஸ் ராக்கிற்கு நன்றித் தெரிவித்து கொள்கிறோம்.
Aishwarya:கண்டிப்பா தனுஷ் இதுக்கு ஒரு மீம் போடுவாரு… ஐஸ்வர்யாவை பங்கம் பண்ணும் நெட்டிசன்ஸ்!
ஸ்மித்துக்கு தடை என்னும் முடிவு கலைஞர்கள் மற்றும் விருந்தினர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கத்தோடும், அகாடமியின் மீதான நம்பிக்கையை மீட்டெடுக்கும் நோக்கத்தோடும் எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
BEAST தமிழகத்திலும் தடையா? – வலுக்கும் கோரிக்கைகள்!