இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் பரபபரப்பான அரசியல் சூழ்நிலையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் இம்ரான் கான் அரசு தோல்வி அடைந்தது.
பாகிஸ்தானில் கடந்த சில நாட்களாக அரசியல் சூறாவளி சுழற்றி அடித்தது. பிரதமர் இம்ரான் கான் மீது எதிர்கட்சிகள் ஊழல் குற்றச்சாட்டு சுமத்தி பதவி விலக வலியுறுத்தி வந்தன. இருப்பினும் நான் கிரிக்கெட் வீரன்.கடைசி பந்து வரையிலும் நம்பிக்கையுடன் போராடுவேன் என பிரதமர் இம்ரான் கூறி வந்தார்.
இதனிடையே அந்நாட்டின் சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி நள்ளிரவில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. அப்போது யாரும் எதிர்பாராத விதமாக பார்லியின் சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர். இருப்பினும் எதிர்கட்சிகள் இடைக்கால சபாநாயகரை நியமித்து நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தின. வாக்கெடுப்பில் இம்ரான் கான் தோல்வி அடைந்தார். உடனடியாக பார்லி வளாகத்தை விட்டு இம்ராகன்கான் மற்றும் ஆளும் கட்சி உறுப்பினர்கள் வெளியேறினர். பிரதமர் இல்லத்தை விட்டும் இம்ரான்கான் வெளியேறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மருத்துவமனைகளில் அவசர நிலை
பாகிஸ்தான் மருத்துவமனைகளில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டது. முன்னதாக பார்லி., வளாகத்தின் வெளியே சிறை கைதிகளை அழைத்து செல்லும் வாகனம் தாயார்நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
அரசு அதிகாரிகளுக்குதடை :
பாக்., அரசு அதிகாரிகள் நாட்டை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் விமான நிலையங்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Advertisement