கர்நாடகாவில் ராமநவமி பல்லக்கு உற்சவத்தின்போது மர்ம நபர்கள் கல்வீச்சில் ஈடுபட்ட நிலையில், அங்கு பதற்றம் ஏற்பட்டதால் போலீசார் லேசான தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்தனர்.
கோலார் மாவட்டம் பாகல் நகரில் ஸ்ரீராம நவமியை முன்னிட்டு கிராம தேவதைகள் பல்லக்கு ஊர்வலம் நடைபெற்றது.
ஊர்வலம் ஜகங்கிர் சர்க்கிள் என்ற இடத்தின் அருகே வந்தபோது, திடீரென மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிலையில், பல்லக்குகள் மேல் கற்கள் வந்து விழத் தொடங்கியதாக சொல்லப்படுகிறது.
இதைக் கண்டித்து, ஊர்வலத்தில் வந்தவர்கள் கூச்சலிட்டதால், அங்கு கலவரம் ஏற்படும் சூழல் உருவானது. இதனையடுத்து போலீசார் லேசான தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்தனர்.