ஆபரணத் தங்கம் விலையானது நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் செல்கிறது. இது நகை பிரியர்கள் மத்தியில் பெரும் கவலையினை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் விருப்பமான உலோகங்களில் ஒன்றாக இருக்கும் தங்கம், மக்களின் வாழ்வில், அவர்களின் உணர்வில் கலந்த ஒரு முதலீடாக இருந்து வருகின்றது.
தமிழ்நாட்டின் புதிய டார்கெட்.. 5 வருடத்தில் 10000 ஸ்டார்ட்அப்..!
இது சிறந்த முதலீடு மட்டும் அல்ல, அவசர தேவைக்கு ஆபத்பாந்தவனாகவும் உள்ளது. இன்றும் பல நடுத்தர குடும்பங்களில் அவசர தேவைக்கு உதவும் என்பதாலேயே மக்கள் தங்கத்தினை வாங்கி வைக்கின்றனர்.
தங்கம் விலை அதிகரிக்கலாம்.
இன்று சர்வதேச சந்தைகள் விடுமுறை என்ற நிலையில், அது தங்கம் விலையில் பெரியளவில் தாக்கத்தினை ஏற்படுத்தவில்லை. எனினும் ரஷ்யா – உக்ரைன் பிரச்சனை, பணவீக்கம், கொரோனா பரவல் பற்றிய அச்சம் என பல காரணிகளுக்கு மத்தியில் தங்கம் விலையானது நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் என்றே கூறி வருகின்றனர். ஆக நீண்டகால நோக்கில் தேவையிருக்கும் பட்சத்தில் ஆபரணத் தங்கம் வாங்க சரியான நேரமாகவே பார்க்கப்படுகிறது.
ஆபரண தங்கம் விலை
ஆபரணத் தங்கத்தின் விலையானது இன்று சற்று அதிகரித்தே காணப்படுகின்றது. தற்போது சென்னையில் கிராமுக்கு 37 ரூபாய் அதிகரித்து, 4919 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 296 ரூபாய் அதிகரித்து, 39,352 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
தூய தங்கம் விலை
சென்னையில் இன்று தூய தங்கத்தின் விலையானது கிராமுக்கு 40 ரூபாய் அதிகரித்து, 5366 ரூபாயாகவும், இதுவே 8 கிராமுக்கு 320 ரூபாய் அதிகரித்து, 42,928 ரூபாயாகவும், இதுவே 10 கிராமுக்கு 53,680 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
வெள்ளி விலை
இதே சென்னையில் இன்று ஆபரண வெள்ளியின் விலையானது பெரியளவில் மாற்றமின்றி சற்று அதிகரித்தே காணப்படுகின்றது. இன்றும் கிராமுக்கு 20 பைசா அதிகரித்து, 71.50 ரூபாயாகவும், இதுவே 10 கிராமுக்கு 715 ரூபாயாகவும், இதுவே கிலோவுக்கு 200 ரூபாய் அதிகரித்து, 71,500 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
முக்கிய நகரங்களில் விலை நிலவரம்
சென்னையில் சவரனுக்கு – ரூ.39,352
மும்பை சவரனுக்கு – ரூ.39,880
டெல்லி சவரனுக்கு – ரூ.39,880
கொல்கத்தாவில் சவரனுக்கு – ரூ.39,880
பெங்களூரில் சவரனுக்கு – ரூ.39,880
கேரளாவில் சவரனுக்கு – ரூ.39,880
புனேயில் சவரனுக்கு – ரூ.39,960
அகமதாபாத்தில் சவரனுக்கு – ரூ.38,920
gold price on April 9th, 2022: gold prices rises to Rs.39,352 per 8 gram
gold price on April 9th, 2022: gold prices rises to Rs.39,352 per 8 gram/கிடுகிடுவென அதிகரிக்கும் தங்கம் விலை.. சாமானியர்கள் பெரும் கவலை..!