கொரிய ஓபன் பேட்மிண்டன் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதி சுற்று போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து தோல்வியடைந்து வெளியேறினார்.
சன்சியான் நகரில் நடைபெற்ற போட்டியில், தென்கொரிய வீராங்கனை அன் சி-யங் – ஐ எதிர்கொண்ட சிந்து, 14-21, 17-21 என்ற நேர் செட் கணக்கிலேயே தோல்வியடைந்து வெளியேறினார்.