சரவணா ஸ்டோர் அண்ணாச்சியுடன் ஐட்டம் பாடலுக்கு ஆட்டம் போட்டுள்ள பிக்பாஸ் பிரபலம்!

தி
லெஜன்ட்
சரவணா ஸ்டோர் அதிபர்
சரவணன்
அருள் நடிக்கும் படம் லெஜன்ட். இந்தப் படத்தை அவரது நிறுவன விளம்பர படங்களை இயக்கிய ஜேடி ஜெர்ரி இணைந்து இயக்கியுள்ளனர்.

இப்படத்தில் சரவணனுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுட்டேலா நடித்து வருகிறார். இந்தப் படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். இப்படத்தின் அப்டேட்டுகள் தொடர்ந்து வெளியாகி வருகிறது.

இந்நிலையில் இப்படத்தின் முதல் சிங்கிள் ட்ராக் இன்று வெளியாகியுள்ளது. இதனை இயக்குநர்கள் எஸ்எஸ்ராஜமவுலி, மணிரத்னம் உள்ளிட்டோர் வெளியிட்டுள்ளனர். இதனிடையே சரவணன் இசைக்கருவியை வாசிக்க, அவருக்கு அருகில் பிக்பாஸ் பிரபலமான நடிகை
யாஷிகா ஆனந்த்
அமர்ந்துள்ளார்.

லெஜன்ட் படத்தில் யாஷிகா ஐட்டம் பாடலுக்கு நடனமாடியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. யாஷிகா ஆனந்த் பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானார். கடந்த ஆண்டு பெரும் விபத்தில் சிக்கி 3 மாதங்களுக்கு மேல் படுத்த படுக்கையாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.