இலங்கை பொருளாதார சிக்கலிலிருந்து மீள்வதற்காக உதவி கோரும் பொருட்டு சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்பொருட்டு நிதி அமைச்சர் அலி சப்ரியின் தலைமையிலான தூதுக்குழு ஒன்று இலங்கையிலிருந்து அமெரிக்கா செல்லவுள்ளதாகக் கூறப்படுகிறது.
மேலும் அக்குழுவில் மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்கவும் நிதி அமைச்சின் செயலாளர் மற்றும் நிபுணர்கள் அடங்கிய குழுவொன்றும் அமெரிக்கா செல்லவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.