பிரபல இயக்குனரும், தயாரிப்பாளருமான டி.ராஜேந்தரின் மகனான
சிம்பு
, குழந்தை நட்சத்திரமாக தனது திரையுலக வாழ்க்கையை துவங்கி தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்கிறார். சர்ச்சைகள், படங்கள் வர தாமதம் என பல்வேறு தடங்கல்கள் ஏற்பட்டாலும், இவருக்கான ரசிகர் பட்டாளத்தில் என்றுமே குறை ஏற்பட்டது இல்லை
அண்மைக்காலமாக மிஸ்டர் பர்பெக்ட் என சொல்லும் அளவிற்கு சிம்புவின் செயல்பாடுகள் மாறியுள்ளனர். தன்மீதுள்ள குற்றச்சாட்டுகளைஎல்லாம் உடைந்தெறிந்து வருகிறார். ‘வந்தா ராஜாவா தான் வருவேன்’ படத்தில் உடல் எடைக்காக அதிகம் ட்ரோல் செய்யப்பட்ட சிம்பு, கடந்த ஆண்டு பொங்கலுக்கு வெளியான ஈஸ்வரன் படத்தின் மூலம் உடல் எடையை முழுவதுமாக குறைத்து ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்தார்.
அதனை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘மாநாடு’ படத்தில் நடித்து முடித்த சிம்பு தற்போது
கெளதம் மேனன்
இயக்கத்தில் நடிக்கவுள்ள ‘
வெந்து தணிந்தது காடு
‘ படத்திற்காக 20 கிலோ எடையை குறைத்து சிறுவயது பையன் லுக்கில் அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் கிளிம்ஸ் வீடியோவை பார்த்த பலரும் சிம்புவா இது என ஆச்சரியத்தில் வாயடைத்து போனார்கள்.
‘தளபதி 66’ படத்திலிருந்து விலகிய பிரபலம்: கடைசி நேரத்தில் நிகழ்ந்த அதிரடி மாற்றம்..!
இந்நிலையில் நடிகர், நடிகைகளின் அந்தரங்க விஷயங்களை பற்றி பேசி பரபரப்பை கிளப்பும்
பயில்வான் ரங்கநாதன்
சிம்புவின் திருமணம் குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.
டி. ராஜேந்தர்
குறித்து பல விஷயங்களை அந்த பேட்டியில் பேசிய பயில்வான் மகன் சிம்புவுக்காக அவரது தந்தையும், மனைவி லதாவும் பட்ட பல கஷ்டங்களை பற்றி பேசினார்.
மேலும் டி. ராஜேந்தர் தனது உறவினர்களில் மகன் சிம்புவிற்காக பெண் பார்ப்பது பற்றியும் கூறியுள்ளார். ஏற்கனவே தனது இரண்டு பிள்ளைகளுக்கும் திருமணம் நடந்து முடிந்த நிலையில், எப்படியாவது விரைவில் சிம்புவிற்கும் திருமணம் செய்து வைத்துவிட வேண்டும் என்பதில் தீவிரம் காட்டி வருவதாகவும், விரைவில் சிம்புவிற்கு திருமணம் நடைபெறும் என்றும் அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார் பயில்வான் ரங்கநாதன்.
செல்வராகவன் ரோல் என்ன? பீஸ்ட் எந்த படத்தின் copy?