உக்ரைனின் செர்னோபில் அணுஉலைக்கு அருகில் உள்ள சிவப்பு காடுகள் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளால் ரஷ்ய ராணுவ வீரர்கள் மிக ஆபத்தான கதிரியக்கத்தால் பாதிக்கப்பட்டு இருப்பதற்கான வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைனில் போரை நிறுத்துவது குறித்து நான்குகட்ட அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்ற போதிலும் ரஷ்யா இதுவரை தாக்குதலை நிறுத்துவதாக தெரியவில்லை,
ரஷ்யாவின் இந்த போர் தாக்குதல் சர்வதேச விதிமுறைகளுக்கு எதிரானது என உலகநாடுகள் கூவிவரும் போதும், இதனை ரஷ்யா சிறப்பி ராணுவ நடவடிக்கை என்றே சொல்லிவருகிறது.
இந்த நிலையில், உக்ரைன் மீது ரஷ்யா தனது தாக்குதலை தொடங்கிய சிலநாள்களேயே கடந்த 1986ல் மிகப்பெரிய வெடிப்பை சந்தித்த செர்னோபில் அணு உலையை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது.
6 வாரங்களை தாண்டி இருக்கும் இந்த போரில் தற்போது செர்னோபில் பகுதியிலிருந்து ரஷ்ய படைகள் வெளியேறிவிட்டன, இருப்பினும் செர்னோபில் அணுஉலைக்கு அருகில் உள்ள சிவப்பு காடுகள் பகுதியில் ராணுவ கனரக வாகனங்களை கொண்டு சென்றது மற்றும் மிகப்பெரிய அகழிகளை உருவாக்கியது போன்ற காரணங்களால் ரஷ்ய படைவீரர்கள் தூண்டப்பட்ட மிக ஆபத்தான கதிரியக்க துகள்களால் பாதிக்கப்பட்டு இருப்பதற்கு வாய்ப்பு இருப்பதாக உக்ரைன் அதிகாரிகள் சனிக்கிழமை தகவல் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து உக்ரைன் அதிகாரிகள் வெளியிட்ட தகவல் குறித்து பேசியுள்ள ஐநாவின் அணுசக்தி கண்காணிப்பு அமைப்பான சர்வதேச அணுசக்தி முகமை, ரஷ்ய படைகள் மிக ஆபத்தான கதிரியக்கத்தால் பாதிக்கப்பட்டு இருப்பதாக வெளியாகி உள்ள அறிக்கையை சுதந்திரமாக சரிபார்க்க முடியவில்லை என தெரிவித்துள்ளது.
செர்னோபில் அணுஉலையில் விரைவாக ஆய்வு மேற்கொள்ளவேண்டியது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது என சர்வதேச அணுசக்தி முகமையின் இயக்குநர் ஜெனரல் ரஃபேல் மரியானோ க்ரோஸி தெரிவித்துள்ளது, மேலும் இதுதொடர்பாக உக்ரைன் அரசாங்கத்திடம் எவ்வளவு விரைவாக முடியுமே அவ்வளவு விரைவாக ஆய்வை தொடங்க வேண்டும் என தீவிரமாக ஆலோசித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
வெள்ளிக்கிழமை நிலவரப்படி, அணுசக்தி கண்காணிப்பாளரால் இன்னும் தளத்தை அணுக முடியவில்லை, ஆனால் ஊழியர்களை பாதுகாப்பது, மற்றும் அணுஉலையை பாதுகாப்பது போன்றவை முன்னுரிமை எனவும் தெரிவித்துள்ளார்.
உணவுக்காக திருடத் தொடங்கியுள்ள சீன மக்கள்…அதிகரிக்கும் கட்டுப்பாடுகள்: அதிர்ச்சி காணொளி!