செர்னோபில் அணுமின் நிலையத்தில் ரஷ்ய ராணுவ வீரர்கள் வசித்த இடத்தில் கதிரியக்கத்தின் அளவு வழக்கத்தை விட அதிகரித்திருப்பதால் அதிகாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
அறையில் கதிரியக்கத்தை வெளிப்படுத்தும் பொருட்கள் இருந்ததற்கான அடையாளம் எதுவும் இல்லை என்ற போதும், கட்டிடத்திற்குள் ரஷ்ய வீரர்களால் அவர்களது காலணி மூலம் கொண்டு வரப்பட்ட சிறிய அளவிலான துகள்கள், தூசிகளில் இருந்து கதிரியக்கம் கசிவதாக உக்ரைன் அதிகாரிகள் கூறுகின்றனர்.
இயற்கையாக நிகழும் கதிர்வீச்சு என உலக அணுசக்தி சங்கம் விவரிக்கும் அளவை விட, ரஷ்ய வீரர்கள் பயன்படுத்திய அறையின் உள்ளே இருக்கும் அளவுகள் சற்று அதிகமாக இருப்பதாக அதிகாரிகள் குறிப்பிட்டனர்.