செறிவூட்டப்பட்ட அரிசி என்றால் என்ன? அது எவ்வாறு தயாரிக்கப்படுகிறது?

Harikishan Sharma 

Fortified rice: அரசு திட்டங்களில் மக்களுக்கு செறிவூட்டப்பட்ட அரிசியை வழங்குவதற்கான ஒப்புதலை வெள்ளிக்கிழமை மத்திய அரசு அளித்தது. இந்தியா உணவுக் கழகமும் மாநில அரசு மாநில அமைப்புகளும் இதுவரை 88.65 லட்சம் மில்லியன் டன்கள் கொள்முதல் செய்யப்பட்டு விநியோகிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு சுதந்திர தின உரையின் போது பிரதமர் நரேந்திர மோடி 2024க்குள் செறிவூட்டப்பட்ட அரிசியை பள்ளிகளில் மதிய உணவு திட்டம் மூலமாகவும் பொது விநியோகத் திட்டத்தின் மூலமும் (PDS), பல்வேறு அரசுத் திட்டங்களின் கீழும் விநியோகிக்கப்படும்.

ஒற்றைத்தன்மை என்பது ஒருமைப்பாட்டை உருவாக்காது – அமித்ஷாவுக்கு ஸ்டாலின் பதிலடி

செறிவூட்டப்பட்ட அரிசி என்றால் என்ன?

“உணவின் ஊட்டச்சத்து தரத்தை மேம்படுத்தவும், பொது சுகாதார நலன்களை கருத்தில் கொண்டு உணவுப் பொருட்களை வழங்கவும், ஒரு உணவின் அத்தியாவசிய நுண்ணூட்டச்சத்துக்களின் உள்ளடக்கத்தை அதிகரிப்பது” தான் செறிவூட்டல் என்று இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் FSSAI- செறிவூட்டப்பட்ட அரிசி என்பதற்கான விளக்கத்தை கூறியுள்ளது.

வழக்கமான அரிசியில் நுண்ணூட்டத்தை வழங்க கோட்டிங், டஸ்டிங் மற்றும் எக்ஸ்ட்ரூஷன் போன்ற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகிறது. கடைசியாகக் குறிப்பிடப்பட்டிருப்பது ‘எக்ஸ்ட்ரூடர்’ இயந்திரத்தைப் பயன்படுத்தி மாவுக் கலவையில் இருந்து வலுவூட்டப்பட்ட அரிசிகளை தயாரிப்பதை உள்ளடக்கியது. இந்தியாவில் இது சிறந்த தொழில்நுட்பமாக கருதப்படுகிறது. செறிவூட்டப்பட்ட அரிசி கர்னல்கள் வழக்கமான அரிசியுடன் கலக்கப்பட்டு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கப்படுகிறது.

செறிவூட்டப்பட்ட அரிசியை உருவாக்க பயன்படுத்தப்படும் தொழில் நுட்பம் என்ன?

உலர்ந்த அரிசி மாவை நுண்ணூட்டச்சத்து கலவையுடன் சேர்க்கப்படுகிறது. மேலும் இந்த கலவையில் தண்ணீர் சேர்க்கப்பட்டு, இரட்டை திருகு எக்ஸ்ட்ரூடர் வழியாக அனுப்பப்படுகிறது. இந்த இயந்திரம் அரிசி மணிகளைப் போன்றே கலவையை மாற்றி வெளியேற்றுகிறது. உலரவைக்கப்பட்டு, குளிரூட்டப்பட்டு பயன்பாட்டிற்காக பேக் செய்யப்படுகிறது. இவ்வாறு உருவாக்கப்பட்ட அரிசியை 12 மாதங்கள் வரை பயன்படுத்திக் கொள்ள முடியும். நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகம் வழங்கிய வழிகாட்டுதல்களின்படி, செறிவூட்டப்பட்ட அரசி மணிகள் சாதாரண அரிசியின் அளவு மற்றும் வடிவமைப்புடன் இருக்க வேண்டும் என்று கூறுகிறது. வழிகாட்டுதல்களின்படி, தானியத்தின் நீளம் மற்றும் அகலம் முறையே 5 மிமீ மற்றும் 2.2 மிமீ இருக்க வேண்டும்.

எதற்காக அரிசி செறிவூட்டப்படுகிறது?

பெண்கள் மற்றும் குழந்தைகள் மத்தியே, இந்தியாவில், ஊட்டச்சத்து குறைபாடு மிகவும் அதிகமாக உள்ளது. உணவு அமைச்சகத்தின் கூற்றுப்படி, நாட்டில் இரண்டில் ஒரு பெண் இரத்த சோகையால் பாதிக்கப்பட்டுள்ளனர். மூன்றில் ஒரு குழந்தை வளர்ச்சி குன்றியதாக உள்ளது.

ஊட்டச் சத்து குறைபாட்டை எதிர்த்துப் போராடுவதற்கு உணவை வலுப்படுத்துவது மிகவும் முக்கியமான பயன்பாட்டு முறையாக கருதப்படுகிறது. அரிசி இந்தியாவின் முக்கிய உணவுகளில் ஒன்றாகும், இது மக்கள் தொகையில் மூன்றில் இரண்டு பங்கு மக்களால் உட்கொள்ளப்படுகிறது. இந்தியாவில் தனிநபர் அரிசி நுகர்வு மாதத்திற்கு 6.8 கிலோ. எனவே, அரிசியை நுண்ணூட்டச் சத்துக்களுடன் செறிவூட்டுவது ஏழைகளின் ஊட்டச்சத்து குறைப்பாட்டை போக்க உதவும்.

அதற்கான தர நிர்ணயம் என்ன?

அமைச்சகத்தின் வழிகாட்டுதல்களின்படி, 10 கிராம் செறிவூட்டப்பட்ட அரிசியை 1 கிலோ வழக்கமான அரிசியுடன் கலக்க வேண்டும். 1 கிலோ செறிவூட்டப்பட்ட அரிசியில் இரும்புச் சத்து 28 mg-42.5 மில்லி கிராம், ஃபோலிக் அமிலம் 75-125 மைக்ரோகிராம், மற்றும் வைட்டமின் B-12 0.75-1.25 மைக்ரோகிராம் இருக்கும். அதே அரிசியில் துத்தநாகம் 10 mg-15 mg, வைட்டமின் A 500-750 மைக்ரோகிராம் RE, வைட்டமின் B-1, 1-1.5 மில்லி கிராம், வைட்டமின் B-2 (1.25 mg-1.75 மில்லி கிராம்), வைட்டமின் B-3 (12.5 மில்லிகிராம் -20 மில்லி கிராம்) மற்றும் வைட்டமின் B-6 (1.5-2.5 மில்லிகிராம்) இருக்கும்.

இந்த அரிசியை எப்படி சமைக்க வேண்டும்?

இதனை சமைக்க மாற்று வழி ஏதும் தேவையில்லை. எப்போதும் அரிசியை சமைக்கும் போது சுத்தம் செய்து, கழுவி பயன்படுத்துவது போன்று தான் பயன்படுத்த வேண்டும். சமைப்பதற்கு முன்பு எப்படி இருந்ததோ அதே அமைப்பு மற்றும் வடிவில் தான் சமைத்த பிறகும் இந்த அரிசி இருக்கும்.

இந்தியாவில் அரிசி செறிவூட்டப்படும் திறன் எவ்வளவு?

கடந்த ஆண்டு பிரதமரின் அறிவிப்பின் போது, ​​கிட்டத்தட்ட 2,700 அரிசி ஆலைகள் செறிவூட்டப்பட்ட அரிசி உற்பத்திக்கான அலகுகள் நிறுவப்பட்டுள்ளது, மேலும் இந்தியாவின் இந்த திறன் 14 முக்கிய மாநிலங்களில் 13.67 லட்சம் டன்களாக இருக்கிறது என்று அமைச்சகம் வழங்கிய புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. செறிவூட்டப்பட்ட அரிசி உற்பத்தி 2 ஆண்டுகளில் 7,250 டன்களில் இருந்து 60,000 டன்களாக அதிகரித்துள்ளது.

சாதாரண அரிசிக்கும் இதற்கும் இடையே உள்ள வித்தியாசம் என்ன?

சணல் பைகளில் விற்பனைக்கு வைக்கப்படும் இந்த அரசியின் பைகளில் (+F) என்று குறிப்பிட்டு “Fortified with Iron, Folic Acid, and Vitamin B12 என்ற வாக்கியம் அச்சிடப்பட்டிருக்கும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.