டாடா நிறுவனத்தின் ‘டாடா நியு’ செயலியை பயன்படுத்தும் போது அதன் இயக்கத்தில் சில சிக்கல்களை எதிர்கொள்வதாக பயனர்கள் தெரிவித்துள்ளனர்.
மளிகை முதல் விமான டிக்கெட் முன்பதிவு செய்ய, யுபிஐ மூலம் பணம் அனுப்ப என பல்வேறு தேவைகளுக்கு ஒரே அப்ளிகேஷனை பயன்படுத்தும் நோக்கில் டாடா நிறுவனம் டாடா நியு மொபைல் போன் அப்ளிகேஷனை அறிமுகம் செய்தது. ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன் ஐஓஎஸ் பயனர்கள் இந்த செயலியை இலவசமாக டவுன்லோடு செய்து பயன்படுத்தலாம். இந்த செயலி குறித்து அறிந்த ஸ்மார்ட்போன் பயனர்கள் பலரும் அதனை ஆர்வமுடன் பதிவிறக்கம் செய்ய தொடங்கினர். ஆண்ட்ராய்டு பயனர்களில் 1 மில்லியனுக்கும் மேற்பட்டவர்கள் இந்த செயலியை டவுன்லோடு செய்துள்ளனர்.
இந்நிலையில், இந்த செயலியை பயன்படுத்தும் போது பல்வேறு இடையூறுகளை சந்திப்பதாக தெரிவித்துள்ளனர். குறிப்பாக இந்த செயலியை பதிவிறக்கம் செய்தவுடன் பயனராக பதிவு செய்து இணைய முயற்சித்தால் ஓடிபி மிகவும் தாமதமாக வருவதாகவும். பலமுறை முயற்சித்த பிறகே லாக்-இன் செய்ய முடிவதாகவும் தெரிவித்துள்ளனர்.
This is not #neu for customers. That’s scale for #india. pic.twitter.com/6xrPYimUcp
— Narayanan Embar (@narayananembar) April 7, 2022
மறுபக்கம் செயலியை பயன்படுத்தும் போது இடையூறுகள் வருவதாகவும். சிலர் யுபிஐ பேமெண்ட் மேற்கொள்ளவதில் சிக்கலை சந்திப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
எதிர்பார்த்ததை விட அதிக அளவிலான வரவேற்பு இருந்த காரணத்தால் புதிய பயனர்கள் பதிவு செய்து இணைவதில் சில தடைகள் இருந்ததாக தெரிகிறது. ஐஓஎஸ் பயனர்கள் இந்த செயலியை டவுன்லோடு செய்யவே சிக்கலை எதிர்கொண்டதாக தெரிவித்துள்ளனர். இதனை ட்விட்டர் தளத்தில் பயனர்கள் புகாராக தெரிவித்துள்ளனர்.