நம்மவர்களுக்கு தங்கத்தின் மீதான பிரியம் என்பது அளவிட முடியாதது. வீட்டில் ஒரு குழந்தையை கூட தங்கம் என்று தான் பாசமாக கூப்பிடுவார்கள். அந்தளவுக்கு தங்கத்தின் மீது அலாதி பிரியம் உண்டு.
அப்படி இருக்கும் தங்கம் விலையானது அவ்வப்போது சரிவினைக் கண்டாலும், ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது விலை அதிகரித்தே காணப்படுகின்றது. ஆக இனி விலை குறையவே குறையாதா? சாமானியர்களுக்கு மீண்டும் வாய்ப்பு கிடைகுமா? என்ற கேள்விகள் எழுகின்றன.
இதற்கிடையில் பல விழாக்கள் என கடந்த சில வாரங்களாக களைகட்டியிருந்தாலும், எதிர்பார்த்த அளவு தங்கம் விற்பனை இல்லை என்று நகை கடை வட்டாரத்தில் கூறப்படுகின்றது.
அதானிக்கு அடித்த ஜாக்பாட்.. ரூ.15400 கோடி முதலீடு செய்யும் அபுதாபி நிறுவனம்..!
தேவை சரிவு
குறிப்பாக இந்தியாவில் தங்கத்தின் ஸ்கிராப் சப்ளை அதிகரித்த நிலையில், தேவையும் சரிவினைக் கண்டுள்ளது. இதற்கிடையில் தங்கத்தின் முக்கிய நுகர்வோரான சீனாவின் தற்போது கொரோனா காரணமாக மீண்டும் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக தங்கத்தின் தேவையானது சரிவினைக் கண்டுள்ளது. எனினும் முதலீட்டு ரீதியாக தங்கத்தின் தேவையானது அதிகரித்துள்ளது.
தள்ளுபடி அதிகரிப்பு
இதற்கிடையில் தான் தங்க டீலர்கள் தங்கத்திற்கு அவுன்ஸூக்கு 40 டாலர்கள் வரையில் தள்ளுபடி கொடுத்து வருகின்றனர். இதற்கு இறக்குமதி வரி 10.75 சதவீதமும், ஜிஎஸ்டி 3 சதவீதமும் வசூலிக்கப்படுகின்றது. கடந்த வாரத்தில் இந்த தள்ளுபடி விகிதமானது 35 டாலர்களாக இருந்தது. விற்பனையானது சரிவினைக் கண்ட நிலையில், தள்ளுபடியும் அதிகரித்துள்ளது. இது தங்கம் விற்பனையை சற்றே ஊக்குவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஸ்கிராப் சப்ளை அதிகரிப்பு
இது குடி பத்வா என்று கூறப்படும் உகாதி பண்டிகை, வார இறுதி நாளில் கொண்டாடப்பட்டது. ஆனால் நகை வியாபாரிகள் வழக்கத்தினை விட விற்பனை குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
பழைய நாணயங்கள், நகைகள் விற்பனை என்பது ஸ்கிராப் சப்ளை என்று அழைக்கப்படுகின்றது. இந்த சமயத்தில் ஸ்கிராப் சப்ளையும் அதிகரித்துள்ளது. விலையும் அதிகரித்துள்ளால் இறக்குமதியும் குறைந்துள்ளது.
சீனாவில் என்ன நிலவரம்
முந்தைய வாரத்தில் சீனாவுக்கு 2 – 6 டாலர்கள் தள்ளுபடி கொடுக்கப்பட்ட நிலையில், இந்த வாரத்தில் 3 டாலர் தள்ளுபடியில் இருந்து 2 டாலர் பிரீமியத்திற்கு அதிகரித்துள்ளது.
இது உக்ரைன் நெருக்கடிக்கு மத்தியில் தங்கத்தினை மக்கள் இன்னும் பாதுகாப்பு புகலிடமாகவே பார்க்கின்றனர். இதே சீனாவிலும் லாக்டவுன் அமலில் இருந்தாலும் சீரான வர்த்தகம் இருந்து கொண்டு தான் உள்ளது. இது தங்கம் விலை அதிக சரிவினைக் காணமல் தடுக்கிறது.
நிபுணர்களின் கணிப்பு என்ன?
தங்கம் மற்றும் வெள்ளியின் தேவையானது நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம். இது பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் பாதுகாப்பு புகலிடமான தங்கத்திற்கு ஆதரவாக அமையலாம். குறிப்பாக சர்வதேச அளவில் அதிகரித்து வரும் பணவீக்கம் என்பது இன்னும் அதிகரிக்கலாம் எனும் விதமாகவே உள்ளது. பணவீக்கத்தினை ஊக்குவிக்கும் காரணிகள் இன்று வரையில், பணவீக்கத்தினை ஊக்குவிக்கும் விதமாகவே அதிகரித்து வருகின்றன.
gold discounts in india widen as Scrap supplies rise, is it a right time to buy?
gold discounts in india widen as Scrap supplies rise, is it a right time to buy?/தங்கத்திற்கு தள்ளுபடியா.. அதுவும் $40.. சாமானியர்களுக்கு நல்வாய்ப்பு கிடைக்குமா?