பெங்களூரு : கொரோனா தொற்று பாதிப்பால் நிறுத்தப்பட்டிருந்த எட்டு ரயில்கள் நேற்று முதல் இயங்க துவங்கியது. பயணியர் மகிழ்ச்சியுடன் பயணத்தை தொடர்ந்தனர்.கொரோனா தொற்று பாதிப்பு அதிகளவில் இருந்த போது, 2020 மார்ச் 24ல் பல ரயில்கள் நிறுத்தப்பட்டன.
இதனால் தங்கவயலில் இருந்து தினமும் பல்வேறு வேலைகளுக்கு சென்று வந்தோர், வசதி இல்லாததால் பெரிதும் பாதித்தனர். பலரது கோரிக்கைக்கிணங்க நேற்று முதல் மீண்டும் ஏழு ரயில்கள் இயக்கப்படுகிறது.l எண்: 1772 என்ற ரயில் மாரிகுப்பத்தில் இருந்து புறப்பட்டு அதிகாலை 4:45 மணிக்கு புறப்பட்டு 7:20 மணிக்கு பெங்களூரு சிட்டி சென்றடையும்l எண்: 1775 பெங்களூரு சிட்டியில் இருந்து மதியம் 12:20 மணிக்கு புறப்பட்டு, 3 :10 மணிக்கு மாரிகுப்பம் வந்தடையும்l எண்: 1778 மாரிகுப்பத்தில் இருந்து பகல் 3:20 மணிக்கு புறப்பட்டு, மாலை 5:10 மணிக்கு பெங்களூரு பையப்பனஹள்ளி சென்றடையும்l
எண்: 1774 பெங்களூரு சிட்டியில் இருந்து பகல் 3:10 மணிக்கு புறப்பட்டு மாலை 5:15 மணிக்கு மாரிகுப்பம் வந்தடையும்l எண்: 6566 மாரிகுப்பம் ரயில் நிலையத்திலிருந்து மாலை 5:25 மணிக்கு புறப்பட்டு இரவு 7:00 மணிக்கு பெங்களூரு கே.ஆர்.புரம் வரை சென்றடையும்l எண்: 1779 பெங்களூரு பையப்பன ஹள்ளியில் இருந்து மாலை 5:30 மணிக்கு புறப்பட்டு இரவு 7:15 மணிக்கு மாரிகுப்பம் வந்தடையும்l எண்: 01773 பங்கார் பேட்டையில் இருந்து மதியம் 12:40 மணிக்கு புறப்பட்டு மதியம் 2:20 மணிக்கு பெங்களூரு சிட்டி வந்தடையும்.இதை வரவேற்று, மாரிகுப்பம், சாம்பியன், உரிகம், கோரமண்டல், பெமல்நகர் ஆகிய ரயில் நிலையங்களில் பேனர் வைத்துள்ளனர்.
Advertisement