தனியார் கோவிட் தடுப்பூசி மையங்களில் தடுப்பூசி செலுத்துவதற்கான சர்வீஸ் கட்டணமாக அதிகபட்சம் 150 ரூபாய் மட்டுமே வசூலிக்க வேண்டும் என பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வ விநாயகம் அனைத்து மாவட்ட சுகாதார இணை இயக்குநர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளார்.
தனியார் மையங்களில் தடுப்பூசி செலுத்துவதற்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை பொது சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, 10ம் தேதியான நாளை முதல் 18 முதல் 59 வயதுடையோருக்கான பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை, தனியார் மருத்துவமனைகளிலோ அல்லது மையங்களிலோ செலுத்திக் கொள்ளலாம்.
தனியார் கோவிட் தடுப்பூசி மையங்களில் தடுப்பூசி செலுத்துவதற்கான சர்வீஸ் கட்டணமாக அதிகபட்சம் 150 ரூபாய் மட்டுமே கட்டணமாக வசூலிக்க வேண்டும் (தடுப்பூசி மருந்திற்கு ஆகும் கட்டணம் தனி. அது 150 ரூபாய்க்குள் வராது) என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
2வது தவனை தடுப்பூசி செலுத்தி 9 மாதங்கள் அல்லது 39 வாரங்களை கடந்தவர்கள் பூஸ்டர் தடுப்பூசியை செலுத்திக்கொள்ள தகுதியானவர்கள். தடுப்பூசியை செலுத்திய பிறகு கோவின் செயலியில் பதிவு செய்வது கட்டாயம் இந்திய அரசு வழிகாட்டியுள்ள நெறிமுறைகளை கட்டாயம் தனியார் தடுப்பூசி மையங்கள் பின்பற்ற வேண்டும்.
அரசு நிர்ணயம் செய்துள்ள தடுப்பூசியின் விலை மற்றும் சேவை கட்டணத்தை விட கூடுதலாக தனியார் மையங்கள் வசூலிக்க கூடாது. அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை மீறும் மையங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதோடு, அங்கீகாரம் ரத்து செய்யப்படும் எனவும் சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM