ஒவ்வொரு வாரமும் நடத்தப்பட்டு வந்த கொரோனா தடுப்பூசி முகாம்கள் இனி நடைபெறாது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவ தொடங்கியதில் இருந்து பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஒவ்வொருவரும் தடுப்பூசிகள் செலுத்திக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு, பொதுமக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள ஏதுவாக சிறப்பு முகாம்களும் நடைபெற்று வந்தன.
தற்போது கொரோனா தொற்று பரவல் பெருமளவு குறைந்துவிட்டது. பெரும்பாலானோர் முதல் தவனை மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசிகளை செலுத்திக் கொண்டுள்ளனர். இதனையடுத்து, இனிமேல் தேவைக்கேற்ப அந்தந்த பகுதிகளில் தடுப்பூசி முகாம்களை நடத்துவது குறித்து மாவட்ட நிர்வாகமே முடிவெடுத்து நடத்திக்கொள்ளலாம் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் இதுவரை 27 சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு சுமார் 4 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.