தனிப்பட்ட சொத்து மதிப்பில் இங்கிலாந்து ராணி எலிசபெத்தை பின்னுக்குத் தள்ளி, அந்நாட்டு நிதி அமைச்சரின் மனைவியும் இந்தியருமான அக்சதா மூர்த்தி முதலிடத்தை பிடித்தார்.
ராணி எலிசபெத்தின் தனிப்பட்ட சொத்து மதிப்பு இந்திய மதிப்பில் சுமார் 3500 கோடி ரூபாய் என கணக்கிடப்பட்டுள்ள நிலையில், தன் தந்தை நாராயணமூர்த்தி தொடங்கிய நிறுவனமான இன்போசிஸில் அக்சதா மூர்த்தியின் வசம் உள்ள பங்குகளின் மதிப்பு மட்டும் 7 ஆயிரம் கோடி ரூபாய் என கணக்கிடப்பட்டுள்ளது.
அதுபோக சொந்த நிறுவனங்களில் இருந்தும் அக்சதா மூர்த்தி வருவாய் ஈட்டி வருவதாக கூறப்படுகிறது. இங்கிலாந்தில் குடியுரிமை பெறாதவர்கள் தங்கள் வெளிநாட்டு வருமானத்திற்கு வரி செலுத்த அவசியமில்லாத நிலையில், தன் கணவரின் மதிப்பு பாதிக்கப்படாத வகையில் தன் வெளிநாட்டு வருமானத்திற்கு வரி செலுத்த உள்ளதாக அக்சதா மூர்த்தி தெரிவித்துள்ளார்.