புதுடெல்லி: 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கரோனா பூஸ்டர் தடுப்பூசியை தனியார் மருத்துவமனைகளின் தடுப்பூசி மையங்களில் வரும் ஞாயிறு முதல் பணம் செலுத்தி போட்டுக் கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக மத்திய அரசு நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
நாடு முழுவதும் இலவச கரோனா தடுப்பூசி திட்டத்தின் மூலம், சுகாதாரப் பணியாளர்கள், முன்கள பணியாளர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு, கரோனா தடுப்பூசி முதல் டோஸ், இரண்டாவது டோஸ் மற்றும் பூஸ்டர் தடுப்பூசி அரசு மருத்துவமனைகளில் தொடர்ந்து செலுத்தப்படும்.
இவர்கள் தவிர, 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும், கரோனா பூஸ்டர் தடுப்பூசியை நாளை ஞாயிற்றுக்கிழமை முதல், தனியார் மருத்துவமனைகளில் உள்ள தடுப்பூசி மையங்களில் பணம் செலுத்தி போட்டுக் கொள்ளலாம்.
இவர்களுக்கு கரோனா பூஸ் டர் தடுப்பூசி அரசு மருத்துவ மனைகளில் இலவசமாக செலுத்தப்படாது.
நாட்டில் உள்ள 15வயதுக்கு மேற்பட்டவர்களில் சுமார் 96 சத வீதம் பேர் முதல் டோஸ் கரோனா தடுப்பூசியும், 83 சதவீதம் பேர் 2வது டோஸ் தடுப்பூசியும் செலுத்திக்கொண்டுள்ளனர்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
– பிடிஐ