தமிழிசை பதவிக்கு ஆபத்து: டெல்லி எடுக்கும் நடவடிக்கை!

தமிழிசை சௌந்தர்ராஜனை
ஆளுநர்
பதவியிலிருந்து நீக்க டெல்லி முடிவெடுத்துவிட்டதாக தகவல்கள் வருகின்றன.

பாஜக மத்தியில் ஆட்சியில் இருக்கும் எட்டு ஆண்டுகளில் பல்வேறு மாநிலங்களிலும் ஆட்சியைப் பிடித்துள்ளது. சில இடங்களில் ஆளும் கட்சிகளுடன் கூட்டணியில் இருக்கிறது. எதிர்கட்சியாக இருக்கும் மாநிலங்களில் ஆளுநர்கள் மூலம் பாஜக அரசியல் செய்கிறது என்ற குற்றச்சாட்டு நாடு முழுவதும் உள்ளது.

பாஜகவைச் சேர்ந்தவர்களை, பாஜக ஆதரவு நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பவர்களை காங்கிரஸ் மற்றும் பிற பிராந்திய கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு ஆளுநர்களாக அனுப்பும் வேலையை பாஜக அரசு செய்துவருகிறது. இவ்வாறு அனுப்பபடுபவர்கள் ஆளுங்கட்சியை எந்தெந்த வடிவிலெல்லாம் கண்காணிக்கலாம், கட்டுப்படுத்தலாம், அவர்களது நடவடிக்கைகளுக்கு முட்டுக்கட்டை போடலாம் என திட்டமிட்டு செயல்படுவதாக புகார்கள் வருகின்றன.

உதயநிதிக்கு இந்த துறைதான்! ஸ்டாலின் கொடுக்கும் கிஃப்ட்: ஜூன் மாதம் சம்பவம்!

அவ்வப்போது இந்த ஆளுநர்கள் டெல்லி சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பிரதமர்
மோடி
ஆகியோரை சந்தித்து நிலைமை என்ன, அடுத்து என்ன செய்யலாம் என்பதை விவாதித்து வருகின்றனர். ஆளுநரோடு மல்லுக்கட்டவே மாநில அரசுகளுக்கு நேரம் சரியாக இருப்பதாக சொல்கிறார்கள்.

அந்த வகையில்
தெலங்கானா
, புதுச்சேரி ஆகிய இரு மாநிலங்களின் ஆளுநரான தமிழிசை சௌந்தர்ராஜன் ஏப்ரல் 6ஆம் தேதி டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்தார். பிற மாநில ஆளுநர்கள் போல் இவரும் பாஜகவின் பிளானை பக்காவாக செயல்படுத்திவிட்டு ரிப்போர்ட் காட்டுவார் என்று எதிர்பார்த்தால் அதுதான் இல்லை என்கிறார்கள் டெல்லி சோர்ஸ்கள்.

தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் மற்றும் அவரது அமைச்சர்கள் தனக்கான மரியாதையை அளிப்பதில்லை என நீண்ட புகார் கடிதம் வாசித்துள்ளார். பத்து மாதங்களாக முதலமைச்சர் சந்திரசேகர ராவ் தன்னை சந்திக்கவே இல்லை என வருத்தப்பட்டு பேசியுள்ளார். மாவட்டங்களுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டால் மாவட்ட அதிகாரிகள்கூட வரவேற்பு அளிப்பதில்லை என்று கண்ணீர் வடிக்காத குறையாக அத்தனையையும் கூறியுள்ளார்.

இதை கேட்டு பிரதமர் மோடியே அதிர்ச்சியடைந்துவிட்டதாகவும் சொல்கிறார்கள். அதன் பின்னர் தான் முக்கிய முடிவை எடுத்துள்ளதாக சொல்கிறார்கள். பாஜக எதிர்ப்பில் உறுதியாக இருக்கும் சந்திரசேகரராவை தமிழிசையின் மென்மையான நடவடிக்கைகளால், அணுகுமுறைகளால் கட்டுப்படுத்த முடியாது. அதற்கு வேறு ஒரு ஆளை அந்த இடத்திற்கு கொண்டு வர டெல்லி முடிவெடுத்துவிட்டதாம்.

எனவே தெலங்கானா உள்ளிட்ட மூன்று மாநில ஆளுநர்களை மாற்றும் உத்தரவு டெல்லியிலிருந்து எப்போது வேண்டுமானாலும் வெளியாகலாம் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.