திராவிடம்’ என்னும் முழக்கம் தமிழ் மொழி வளர்ச்சிக்கு தடை : காயத்ரி ரகுராம் ட்விட்டுக்கு நெட்டிசன்கள் பதிலடி

Actress Gayathri Raguram Replay To A.R.Rahaman : மத்திய உள்துறை அமைச்சர் அமி்த்ஷா, ஆங்கில மொழிக்கு மாற்றாக இந்தி மொழியை பயன்படுத்த வேண்டும் என்று கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இவரின் கருத்துக்கு எதிரான இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்ட பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

தமிழ் மட்டுமல்லாமல், இந்தியாவின்பல மொழிகளில் இசையமைத்து முன்னணி இசையமைப்பாளராக இருக்கும் ஏ.ஆர்.ரஹ்மான், 2 ஆஸ்கார் விருதுகளை வாங்கிய பெருமைக்குரியவர். இசைப்புயல் என்று அழைக்கப்படும் இவர், தமிழ் மொழியின் மீது தீராத பற்றுகொண்டவர். இதை வெளிப்படுத்தும் விதமாக பல தமிழ் ஆல்பங்களை வெளியிட்டள்ளார். மேலும் வெளிநாடுகளுக்கு சென்றாலும் கூட மேடை ஏறும்போது முதலில் தமிழுக்கு முக்கித்துவம் கொடுக்கும் வகையில் தமிழில் பேசுவார்.

தமிழ் மொழிக்கு ஒரு பிரச்சினை என்றால் முதலில் குரல் கொடுக்கும் நபராக உள்ள ஏ.ஆர்.ரஹ்மான், வட இந்தியாவில் நடைபெறும் விருதுவழங்கும் விழாவில் கூட தமிழில் பேசி அசத்தக்கூடியவர். இவரின் தமிழுக்காகவே உலகின் பல நாடுகளில் இவருக்கான ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. பல ஆண்டுகளாக நடைபெற்று வரும் இந்தி திணிப்பு குறித்து அவ்வப்போது குரல் கொடுத்து வரும் ஏ.ஆர்.ரஹ்மான், தற்போது அமித்ஷாவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

அதில், ழகரத்தை ஏந்தி நிற்கும் ஒரு புரட்சிப்பெண்ணின் புகைப்படத்தை வெளியிட்டுள்ள அவர், அதன் னீழு் இன்பத் தமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு சேர் என்ற வரிகளை பதித்துள்ளார். இந்தியாவில் உள்துறை அமைச்சகத்தில் 70 சதவீதம் ஹிந்தி மொழியே பயன்படுத்தப்பட்டு வருவதாகவும், அனைத்து மாநில மக்களும் உரையாடுவதற்கு பொது மொழியாக ஆங்கிலத்திற்கு மாற்றாக இந்திய மொழி இருக்க வேண்டும் என்று கூறியிருந்தார்

அமித்ஷாவின் இந்த கருத்து தமிழகத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவருக்கு பதில் தரும் விதமான ஏ.ஆர்.ரஹ்மானின் பதிவு வைரலாக பரவி வருகிறது. இந்நிலையில், ரஹ்மானின் பதிவுக்கு பதில் அளிக்கும் வகையில் நடிகை காயத்ரி ரகுராம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், தமிழில் வெளியான பாடல் வரிகளை குறிப்பிடடுள்ள அவர் ஏ.ஆர்.ரஹமான் இசையமைத்த பல பாடல் வரிகளை இணைத்துள்ளார்.

இதுகுறித்து பதிவிட்டுள்ள அவர், திராவிடக் கட்சிகள், இசை அமைப்பாளர் மற்றும் பாடலாசிரியர் தமிழில் இதுபோன்ற வார்த்தைகளைச் சேர்த்ததுதான் அவர்களின் சாதனை. – முஸ்தபா முஸ்தபா don’t சாதனை. வலுஹாபா வலுஹாபா Urvasi Urvasi, ஹே ஷபா ஹே ஷபா.. macho என்னா ஆச்சோ.. and more.. இதுதான் தமிழ் வளர்ச்சி? முக்காலா முகபுல்லா, தில் ரூபா தில் ரூபா, hello doctor heart weak ache.. என்று பதிவிட்டுள்ளார்.

இந்த பதிவு தற்போது வைரலாகி வரும் நிலையில், காயத்ரி ரகுராம் ட்விட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

 “


Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.