போதை பொருட்கள் தொடர்பாண விழிப்புணர்வு வாசகங்களை திரைப்படங்களில் வெளியிட வேண்டும் என திரைத்துறையினருக்கு முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில் தென்னிந்திய ஊடக மற்றும் பொழுதுபோக்கு மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பின்னர் நிகழ்சியில் பேசிய அவர், தனது தந்தை காலம் முதல், மகன் காலம் வரை திரைத்துறையில் பங்காற்றி இருப்பது பெருமையாக இருப்பதாக தெரிவித்தார்.
மேலும் போதைப் பொருள் தொடர்பான விழிப்புணர்வு வாசகங்களை திரைப்படங்களில் வெளியிட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.