மைசூரு : ”சட்ட மேலவையின், தெற்கு பட்டதாரி தொகுதி தேர்தல் பிரசாரம் துவங்கப்பட்டுள்ளது. பலரை சந்தித்து ஆலோசனை நடத்துகிறோம்,” என கூட்டுறவுத்துறை அமைச்சர் சோமசேகர் தெரிவித்தார்.மைசூரில் அவர் நேற்று கூறியதாவது:சட்ட மேலவையின், தெற்கு பட்டதாரி தொகுதி தேர்தலில், பா.ஜ., வேட்பாளருக்கு ஆதரவாக, பிரசாரத்தை துவங்கியுள்ளோம்.
வரும் 11 முதல் 14 வரை மைசூரில் ஓட்டு கேட்கப்படும். எங்கள் வேட்பாளரை ஆதரிக்கும்படி, முன்னாள் துணை வேந்தர் ரங்கப்பாவிடம், வேண்டுகோள் விடுத்துள்ளோம்.முன்னாள் அமைச்சர் ஜெகதீஷ் ஷெட்டர், முதன் முறையாக, டில்லி செல்லவில்லை. இதற்கு முன்பும், பல முறை சென்று வந்தார். பல்வேறு திட்டங்கள் தொடர்பாக, மத்திய அமைச்சர்களை சந்தித்தார்.விவசாயிகளின் நலன் கருதி, மாவட்ட கூட்டுறவு வங்கிகளை, அபெக்ஸ் வங்கியுடன் இணைக்க ஆலோசிக்கப்படுகிறது.
வேறு மாநிலங்களில் இணைக்கப்பட்டுள்ளது.இங்குள்ள அதிகாரிகள் அந்த மாநிலங்களுக்கு, சுற்றுப்பயணம் சென்று ஆய்வு செய்வர். சாதகம், பாதகங்கள் குறித்து கலந்தாலோசித்த பின், மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பப்படும்.சாமுண்டி மலைக்கு, ‘ரோப் கார்’ கொண்டு வருவது குறித்து, முதல்வருடன் ஆலோசித்தோம். மைசூரு அபிவிருத்தியில் கவனம் செலுத்தியுள்ளோம். திரைப்பட நகர் அமைக்க, விமான நிலையம், கே.ஆர்.மருத்துவமனை அபிவிருத்திக்கு நிதி வழங்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement