ஐபிஎல்-யின் முன்னணி அணியான மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ந்து நாளாவது போட்டியிலும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியிடம் 7 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்துள்ளது.
புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் வைத்து நடைபெற்ற போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின.
இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சை தேர்வு செய்ததை அடுத்து பேட்டிங்கில் களமிறங்கிய மும்பை அணி, 6 ஓவர்களில் 1 விக்கெட்டை மட்டுமே இழந்து 50 ஓட்டங்களை எடுத்து அதிரடியாக ஆட்டத்தை தொடங்கியது, இருப்பினும் அடுத்தடுத்த வந்த வீரர்கள் சிறப்பாக செயல்பட தவறியதை அடுத்து மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்களை இழந்து 151 ஓட்டங்களை மட்டுமே எடுத்து இருந்தது.
இதையடுத்து இரண்டாவது இன்னிங்சில் களமிறங்கிய பெங்களூரு அணி தொடக்கம் முதலே நிதானமான ஆட்டத்தை கடைபிடித்து அணியை வெற்றிப்பாதைக்கு கொண்டுசென்றது.
பெங்களூரு அணியில் அதிகபட்சமாக இளம் வீரர் அனுஜ் ராவத் 66 ஓட்டங்களையும், விராட் கோலி 48 ஓட்டங்களையும் சேர்த்து இருந்தனர்.
மும்பை அணிக்கு எதிராக பெங்களூரு அணி 18.3 ஓவரில் 3 விக்கெட்களை மட்டுமே இழந்து 152 ஓட்டங்களை பெற்று வெற்றி அடைந்ததை தொடர்ந்து இளம் வீரர் அனுஜ் ராவத் ஆட்டநாயகன் விருதை தட்டிச்சென்றுள்ளார்.
இந்த போட்டிக்கு முன்னதாக நடைபெற்ற மற்றொரு போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் தொடர்ந்து நான்காவது போட்டியிலும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியிடம் படுதோல்வி அடைந்துள்ளது.
உணவுக்காக திருடத் தொடங்கியுள்ள சீன மக்கள்…அதிகரிக்கும் கட்டுப்பாடுகள்: அதிர்ச்சி காணொளி!