நடிகர் சதீஷ் நடிப்பில் உருவான புதிய படத்தின் தலைப்பை வெளியிடும் பிரபல நடிகர்…!

காமெடி நடிகராக அறிமுகமான நடிகர் சதிஷ், தற்போது கதாநாயகனாக நடித்து வருகிறார். அந்த வகையில்
ஏஜிஎஸ்
நிறுவனம் சார்பில் கல்பாத்தி அகோரம் தயாரித்த ‘நாய் சேகர்’ முதன்முதலில் கதாநாயகனாக அறிமுகமானார்.

அறிமுக இயக்குனர்
கிஷோர்
ராஜ் இயக்கத்தில் உருவான இப்படம் கடந்த ஜனவரியில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது.இந்த படத்தை அடுத்து புதிய படம் ஒன்றில் கதாநாயகனாக சதிஷ் நடிக்கவுள்ளார். இந்த படத்தை சிக்ஸர் பட இயக்குனர்
சாச்சி
இயக்கவுள்ளார்‌. வெண்பா முக்கிய காதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.

என் படத்தை மோடி தடுத்துவிட்டார்: பரபரப்பை கிளப்பிய பிக்பாஸ் பிரபலம்..!

ஏ.ஜி.முத்தையா
தயாரிக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நாளை மாலை 5 மணிக்கு பிரபல நடிகரான
சிம்பு
வெளியிடவுள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

கடந்த 2019-ம் ஆண்டு
வைபவ்
மற்றும் பாலக் லால்வானி ஆகியோர் நடிப்பில் ‘சிக்ஸர்’ திரைப்படம் வெளியானது.

முழுக்க முழுக்க காமெடி கதைக்களத்தில் உருவான இந்த படத்தை
வால்மேட்
என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் தினேஷ் கண்ணன்,
ஸ்ரீதர்
ஆகியோர் இணைந்து தயாரித்தன. வைபவ் மாலைக்கண் நோயால் பாதிக்கப்பட்டவராக நடித்த இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Sila Nerangalil Sila Manithargal – மனசு நெறஞ்சுருக்கு ; ரொம்ப சந்தோசம்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.