நம்பிக்கையில்லா தீர்மானம் நிராகரிப்புக்கு எதிரான உச்சநீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து பாகிஸ்தான் அரசு அந்நாட்டு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.
நாடாளுமன்றத்தில் இம்ரான் கான் அரசு மீது கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தை துணை சபாநாயகர் கடந்த வாரம் நிராகரித்தார்.
இது தொடர்பான வழக்கில், துணை சபாநாயகரின் உத்தரவு சட்டவிரோதமானது என கடந்த 7ஆம் தேதி அறிவித்த உச்சநீதிமன்றம், நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பிற்கு நாடாளுமன்றத்தை கூட்ட உத்தரவிட்டது.
இந்நிலையில், சட்ட வல்லுநர்களுடன் காபந்து பிரதமர் இம்ரான் கான் இன்று ஆலோசனை மேற்கொண்டதை அடுத்து, தீர்மானம் நிராகரிப்புக்கு எதிரான உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.