புதுச்சேரி : நேரு வீதி, காந்தி வீதியில் 11ம் தேதி முதல் மொத்த மீன் வியாபாரம் செய்ய தடை செய்யப்பட்டுள்ளது. வெளிமாநில மீன்கள் லாரிகளில் கொண்டு வந்து, புதுச்சேரி நேரு வீதியில் விற்பனை செய்யப்பட்டதால், துர்நாற்றம் வீசியது. இதனால், நேரு வீதி, காந்தி வீதியில் மொத்த மீன் வியாபாரம் செய்ய புதுச்சேரி நகராட்சி தடை விதித்தது.மீன் வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர்.
முதல்வர் தலைமையில் நடந்த கூட்டத்தில், நேரு வீதியில் மொத்த வியாபாரம் செய்ய தடை விதிக்கப்பட்டது. இது குறித்த விளக்க கூட்டம், போலீஸ் சீனியர் எஸ்.பி., தீபிகா, போக்குவரத்து எஸ்.பி., மாறன் தலைமையில் நடந்தது. மொத்த மீன் வியாபாரம் செய்யும் வைத்திக்குப்பம், குருசுக்குப்பம், வம்பாக்கீரப்பாளையம் கிராமத்தினர் பங்கேற்றனர்.கூட்டத்தில், 11ம் தேதி முதல் நேரு வீதி, காந்தி வீதியில் மொத்த மீன் வியாபாரம் செய்ய கூடாது. நவீன மீன் அங்காடியில் வியாபாரம் செய்ய வசதி செய்து தரப்படும் என தெரிவித்தனர்.இதற்கு வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து சென்றனர்.
Advertisement